கள்ளத்துப்பாக்கி பறிமுதல்: என்.ஐ.ஏ., விசாரிக்க வழக்கு

Added : செப் 15, 2022 | |
Advertisement
மதுரை : சென்னை, திருச்சியில் சட்ட விரோதமாக வைத்திருந்த கள்ளத்துப்பாக்கி, தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டதில் என்.ஐ.ஏ., விசாரணை கோரிய வழக்கில், தமிழக அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை நேற்று உத்தரவிட்டது.மதுரை வழக்கறிஞர் கார்மேகம் என்பவர், 2018 ல் தாக்கல் செய்த பொதுநல மனுவில் கூறியிருந்ததாவது:சென்னையில் ஒரு எக்ஸ்பிரஸ் ரயிலில் கடத்திய உரிமம்



மதுரை : சென்னை, திருச்சியில் சட்ட விரோதமாக வைத்திருந்த கள்ளத்துப்பாக்கி, தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டதில் என்.ஐ.ஏ., விசாரணை கோரிய வழக்கில், தமிழக அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை நேற்று உத்தரவிட்டது.

மதுரை வழக்கறிஞர் கார்மேகம் என்பவர், 2018 ல் தாக்கல் செய்த பொதுநல மனுவில் கூறியிருந்ததாவது:
சென்னையில் ஒரு எக்ஸ்பிரஸ் ரயிலில் கடத்திய உரிமம் இல்லாத கள்ளத் துப்பாக்கிகள், தோட்டாக்கள், 4 லட்சம் ரூபாய் கள்ள நோட்டுக்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.இவ்வழக்கில் பிரதீப், சென்னை நம்மாழ்வார்பேட்டை போலீஸ்காரர் பரமேஸ்வரன் கைது செய்யப்பட்டனர்.திருச்சியில் நாகராஜன், சிவாவிடம் உரிமம் இல்லாத துப்பாக்கி, தோட்டாக்களை பறிமுதல் செய்து கைது செய்தனர்.
உரிமம் இல்லாத துப்பாக்கிகள் சென்னை, கோவை, திருப்பூரைச் சேர்ந்த சில அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், வழக்கறிஞர்களுக்கு சட்டவிரோதமாக விற்கப்படுகிறது.இதை மாநில போலீசார் பாரபட்சமின்றி விசாரிக்க வாய்ப்பில்லை.சென்னை, திருச்சியில் சட்டவிரோதமாக உரிமம் இன்றி வைத்திருந்த ஆயுதங்களை பறிமுதல் செய்த வழக்கு விசாரணையை தேசிய புலனாய்வு ஏஜன்சியான என்.ஐ.ஏ., அல்லது சி.பி.ஐ.,க்கு மாற்ற உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அவர் மனுவில் கூறியிருந்தார்.

.ஏற்கனவே விசாரணையின்போது அரசு தரப்பு, 'வழக்குப் பதிந்து, சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். விசாரணை சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றப்பட்டுள்ளது' என தெரிவித்தது.வழக்கை நேற்று விசாரித்த நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்திய நாராயண பிரசாத் அமர்வு, 'விசாரணையின் மேல் நடவடிக்கை குறித்து தமிழக உள்துறை செயலர், டி.ஜி.பி., இரண்டு வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்' என உத்தரவிட்டது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X