காஞ்சி ஒன்றியங்களில் கோடிக்கணக்கில் முறைகேடு?

Updated : செப் 15, 2022 | Added : செப் 15, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில், கொரோனா பரவல் அதிகமாக இருந்த, 2020 மற்றும் 2021ம் ஆண்டுகளில் நடந்த வரவு - செலவில், ஊரக வளர்ச்சி துறையில், கோடிக்கணக்கான ரூபாய் முறைகேடு நடந்திருப்பதாக தெரியவந்துள்ளது.ஸ்ரீபெரும்புதுார் மற்றும் குன்றத்துார் ஒன்றியங்களில் தலா, ௧ கோடி ரூபாய்க்கும் மேலாகவும், காஞ்சிபுரம் ஒன்றியத்தில், 60 லட்சம் ரூபாயும், பொது கணக்கிலிருந்து

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில், கொரோனா பரவல் அதிகமாக இருந்த, 2020 மற்றும் 2021ம் ஆண்டுகளில் நடந்த வரவு - செலவில், ஊரக வளர்ச்சி துறையில், கோடிக்கணக்கான ரூபாய் முறைகேடு நடந்திருப்பதாக தெரியவந்துள்ளது.

ஸ்ரீபெரும்புதுார் மற்றும் குன்றத்துார் ஒன்றியங்களில் தலா, ௧ கோடி ரூபாய்க்கும் மேலாகவும், காஞ்சிபுரம் ஒன்றியத்தில், 60 லட்சம் ரூபாயும், பொது கணக்கிலிருந்து குறைந்திருப்பதாக, 2020 - -21ம் ஆண்டுக்கான தணிக்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.



latest tamil news




இது தொடர்பாக இத்துறை செயலர் அமுதா, கடந்த மாதம் 30ம் தேதி, முதற்கட்ட விசாரணை நடத்தியுள்ளார். இன்றும் ஆய்வு நடத்த உள்ளார். கொரோனா காலத்தில், ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள், தங்கள் இஷ்டம்போல செலவிட்டு, வரவு - செலவு கணக்குகளை முறையாக பராமரிக்காததால், தணிக்கையில் கோடிக்கணக்கான ரூபாய் வித்தியாசம் வந்துள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெயர் வெளியிட விரும்பாத ஊரக வளர்ச்சி துறை அதிகாரி கூறியதாவது:
தணிக்கையின்போது, ஒன்றியங்களின் பொது நிதி குறைந்திருப்பதாக கூறுவது முறைகேடு இல்லை. கருவூலங்களில் நடந்த குளறுபடிகள். ஸ்ரீபெரும்புதுாரில் வரவு வைக்க வேண்டிய நிதி, மாறுதலாக குன்றத்துார் ஒன்றியத்தில் வரவு வைக்கப்பட்டிருக்கிறது. இது போன்ற தவறுகளால், தணிக்கையில் வித்தியாசம் வருகிறது. கருவூலத் துறையிடம் பலமுறை தெரிவித்தும், வித்தியாசம் வரும் நிதியை முறையாக வரவு வைக்க ஆர்வம் காட்டவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
jayvee - chennai,இந்தியா
15-செப்-202210:50:52 IST Report Abuse
jayvee திமுகவின் தாய் மாவட்டத்தில் இது சகஜம்.. ஒரு அமைச்சர், அவரது குடும்பமே இன்று பல்லாவரம் சுற்று பகுதிகளை தங்களது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது ..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X