தகவல் பெறும் உரிமை

Added : செப் 15, 2022 | |
Advertisement
ஆசிரியர்: கே.ஹக்கிம்வெளியீடு: ஆர்.டி.ஐ., பதிப்பகம், காயிதேமில்லத் நகர் 1வது தெரு, கீழவெளி வீதி, மதுரை.அலைபேசி: 99527 25599பக்கம்: 416 விலை: ரூ.450மதுரை மாநகராட்சி மைய அலுவலகத்தில் இருக்கும் தகவல் அறியும் உரிமை சட்டங்கள் குறித்த அறிவிப்பு பலகை தான் இந்த புத்தகம் எழுத துாண்டியது என்ற சிறு அறிமுகத்தோடு ஆரம்பித்து பக்கங்களுக்குள் நம்மை கைபிடித்து அழைத்து செல்கிறார் ஆசிரியர்
தகவல் பெறும் உரிமை



ஆசிரியர்: கே.ஹக்கிம்வெளியீடு: ஆர்.டி.ஐ., பதிப்பகம், காயிதேமில்லத் நகர் 1வது தெரு, கீழவெளி வீதி, மதுரை.அலைபேசி: 99527 25599பக்கம்: 416 விலை: ரூ.450

மதுரை மாநகராட்சி மைய அலுவலகத்தில் இருக்கும் தகவல் அறியும் உரிமை சட்டங்கள் குறித்த அறிவிப்பு பலகை தான் இந்த புத்தகம் எழுத துாண்டியது என்ற சிறு அறிமுகத்தோடு ஆரம்பித்து பக்கங்களுக்குள் நம்மை கைபிடித்து அழைத்து செல்கிறார் ஆசிரியர் ஹக்கிம்.

மத்திய, மாநில அரசுகளின் திட்டங்கள் எந்த நிலையில் உள்ளது என்பதை பொதுமக்கள் அறிய தகவல் அறியும் உரிமை சட்டம் கொண்டுவரப்பட்டது. அதன்படி இப்புத்தக ஆசிரியர் சட்டம் சார்ந்து தான் பெற்ற அனுபவங்களை ஆங்காங்கே பதிவு செய்துள்ளார். இச்சட்டப்படி யார் வேண்டுமானாலும் அரசு துறைகளிடம் கேள்விகளை கேட்டு பதில் பெறலாம் என புரிய வைத்துள்ளார்.
இச்சட்டத்தின் மூலம் கிடைத்த தகவல்கள், பயன்பெற்றவர்கள், வழக்குகள், தண்டனைகள் என அடுக்கடுக்காக பல்வேறு தகவல்களை அள்ளி தருகிறார். அரசின் முக்கிய திட்டங்கள், படிவங்களை அதிகாரப்பூர்வமாஜ இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்ய உரிய விளக்கங்களுடன் க்யூ.ஆர்., கோடுகளையும் கொடுத்துள்ளார்.
ஏன், எதற்கு, எப்படி மனுக்கள் எழுத வேண்டும் என அருமையாக வழிகாட்டியுள்ளார். இறுதி பக்கம் முழுவதும் கிராம சபை கூட்டத்தின் முக்கியத்துவம், நடைமுறைகள் குறித்து பொக்கிஷ தகவல்களை எழுதியுள்ளார்.- -சீனி


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X