தமிழ் ஞானபோதம்

Added : செப் 15, 2022 | |
Advertisement
தொகுப்பாளர்: ஜோதிர்வனவூர் சொக்கரமணகிரி தாசலிங்கம்வெளியீடு: பூமாயி பதிப்பகம், மதுரை - 625 016அலைபேசி: 63808 81797பக்கம்: 282 விலை: ரூ.300முழுமுதற் கடவுளான சிவபெருமான், நந்தி தேவருக்கும், மாணிக்கவாசகருக்கும் அருளிய சைவ சித்தாந்த போதனைகளை விளக்கும் தொகுப்பு நுால். உடன் தமிழின் வரலாற்று சிறப்புகளையும், பெருமைகளையும் பக்தி பரவசமூட்டும் தமிழ் சொற்களால் சான்றுகளோடு விளக்கப்பட்டுள்ளன.
தமிழ் ஞானபோதம்



தொகுப்பாளர்: ஜோதிர்வனவூர் சொக்கரமணகிரி தாசலிங்கம்

வெளியீடு: பூமாயி பதிப்பகம், மதுரை - 625 016அலைபேசி: 63808 81797பக்கம்: 282 விலை: ரூ.300

முழுமுதற் கடவுளான சிவபெருமான், நந்தி தேவருக்கும், மாணிக்கவாசகருக்கும் அருளிய சைவ சித்தாந்த போதனைகளை விளக்கும் தொகுப்பு நுால். உடன் தமிழின் வரலாற்று சிறப்புகளையும், பெருமைகளையும் பக்தி பரவசமூட்டும் தமிழ் சொற்களால் சான்றுகளோடு விளக்கப்பட்டுள்ளன.
அவ்வையின் விநாயகர் அகவல், சிவபுராணம், கோளறு பதிகம், லிங்காஷ்டகம் போன்ற ஆன்மிக பதிகங்கள், அவற்றின் வரலாற்றோடு தொகுக்கப்பட்டுள்ளது. சைவ நெறி காப்பாளர்களான அப்பர், திருஞானசம்பந்தர், மாணிக்கவாசகர், திலகவதியார், அரசி மங்கையர்க்கரசியார் ஆகியோரின் வரலாறுகளை விளக்கும் விதம் அருமை.
பண்டைய தமிழரின் ஆகம விதிகள், புராண செய்திகள், குறிப்புகள் என ஹிந்து சமய பெருமைகளை அடுத்த தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்கும் வகையில் எளிய நடையில் கட்டுரைகளாக அடுக்கித் தந்திருக்கிறார் ஆசிரியர்.- ரிஷி


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X