சிறப்பு பகுதிகள்

அறிவியல் மலர்

பசுமைச் சலவை

Added : செப் 15, 2022 | |
Advertisement
சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காமல், அதே சமயம் லாபகரமாகவும் சலவைத் தொழிலை நடத்தக் கிளம்பியிருக்கிறது ஆக்ஸ்வாஷ். பிரிட்டனிலுள்ள இதை துவங்கிய டாக்டர். கைல் கிரான்ட் மற்றும் டாம் டி வில்டன் ஆகியோர் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள்.வர்த்தக சலவையகங்கள், உலர் சலவைக்காக, சூழலைக் கெடுக்கும் முரட்டு வேதிப் பொருட்களை பயன்படுத்துகின்றன. இதை தவிர்க்க,
ஆக்ஸ்வாஷ், சலவை, Oxwash, Dr Kyle Grant, Tom de Wilton, டாக்டர் கைல் கிரான்ட், டாம் டி வில்டன்,  Laundry, Oxford University , Scientists, ஆக்ஸ்போர்டு பல்கலை, விஞ்ஞானிகள்,

சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காமல், அதே சமயம் லாபகரமாகவும் சலவைத் தொழிலை நடத்தக் கிளம்பியிருக்கிறது ஆக்ஸ்வாஷ். பிரிட்டனிலுள்ள இதை துவங்கிய டாக்டர். கைல் கிரான்ட் மற்றும் டாம் டி வில்டன் ஆகியோர் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள்.

வர்த்தக சலவையகங்கள், உலர் சலவைக்காக, சூழலைக் கெடுக்கும் முரட்டு வேதிப் பொருட்களை பயன்படுத்துகின்றன. இதை தவிர்க்க, ஆக்ஸ்வாஷ் ஈரச் சலவை முறையை நாடுகிறது.இந்த முறையில், சலவைக்கு மறுசுழற்சி செய்த நீர்தான் பயன்படுத்தப்படுகிறது. இயற்கை சோப்புத் துாள்களை பயன்படுத்துகிறது.

கிருமிகளைக் கொல்லவும், துர்நாற்றத்தை போக்கவும், ஓசோன் தொழில்நுட்பம் பயன்படுகிறது.அதுமட்டுமல்ல, துணியின் வகையை அறிந்து, சோப்புகளை பயன்படுத்த செயற்கை நுண்ணறிவு கேமிராக்களும், ரோபோ கரங்களும் பயன்படுகின்றன. கடைசியாக, சலவை செய்த துணிகளை கொடுக்க சூரிய மின்சார வாகனங்கள் செல்கின்றன. இயற்கைக்கு இசைவாக சலவையகத்தை விஞ்ஞானிகளால்தான் நடத்த முடியும்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X