சிறப்பு பகுதிகள்

அறிவியல் மலர்

பசுமைமின் பலகைகள்

Added : செப் 15, 2022 | |
Advertisement
பசுமை மிகு சுவிட்சர்லாந்தில், விவசாயிகள், மண் மேல் விவசாயத்திலிருந்து, பசுமைக் குடில்களில் வேளாண்மை செய்யும் முறைக்கு வேகமாக மாறி வருகின்றனர்.ஆனால், அவர்களுக்கு மின்சாரச் செலவு மட்டும் அதிகரித்துள்ளது. இதைத் தடுக்க, பசுமைக் குடில்களுக்கென்றே, சிறப்பு சூரிய மின் தகடுகளை கண்டுபிடித்துள்ளது வோல்டிரிஸ் (Voltiris) என்ற புத்திளம் நிறுவனம்.வழக்கமாக, கூரை மேல் சூரிய மின்
சூரிய மின்தகடு,  சுவிட்சர்லாந்து, விவசாயிகள், மின்சாரம், solar panel, green panel, Switzerland, farmers, electricity,பசுமை மின் பலகை,

பசுமை மிகு சுவிட்சர்லாந்தில், விவசாயிகள், மண் மேல் விவசாயத்திலிருந்து, பசுமைக் குடில்களில் வேளாண்மை செய்யும் முறைக்கு வேகமாக மாறி வருகின்றனர்.

ஆனால், அவர்களுக்கு மின்சாரச் செலவு மட்டும் அதிகரித்துள்ளது. இதைத் தடுக்க, பசுமைக் குடில்களுக்கென்றே, சிறப்பு சூரிய மின் தகடுகளை கண்டுபிடித்துள்ளது வோல்டிரிஸ் (Voltiris) என்ற புத்திளம் நிறுவனம்.வழக்கமாக, கூரை மேல் சூரிய மின் பலகைகளை வைத்தால், கீழே சூரிய ஒளி வராது. ஏனெனில், சூரிய மின் தகடுகள் ஒளியைத் தடுத்து மின்சாரமாக மாற்றவேண்டியுள்ளது. ஆனால், வோல்டிரிசின் நிறுவனர்கள் உருவாக்கியுள்ள, சூரிய மின் பலகைகள், கண்ணாடி போல கூரையிலிருந்து சூரிய ஒளியை பசுமைக் குடிலுக்குள்ளே அடுக்கப்பட்டிருக்கும் செடிகளின் மீது விழ அனுமதிக்கின்றன.

பின் மின்சாரம் தயாரிப்பது எப்படி? செடிகளுக்கு சூரிய ஒளிக் கதிரிலுள்ள வண்ணங்களில் நீலம் மற்றும் சிவப்பு ஆகியவற்றைத் தான் கிரகித்து, பச்சையம் தயாரிக்கின்றன. மீதி உள்ள அகச் சிவப்பு மற்றும் பச்சை வண்ண ஒளிக்கற்றைகள், போட்டோவோல்டாயிக் செல்களின் மீது பட்டு மின்சாரத்தை உற்பத்தி செய்து தருகின்றன. இதனால் பசுமைக் குடில்களின் 60 - 100 சதவீத மின் தேவையை வோட்ரிசின் சூரிய ஒளிப் பலகைகள் பூர்த்தி செய்துள்ளன. இத்தகைய தொழில்நுட்பம் நடைமுறைக்கு வந்தால், விவசாயிகள், மின்சார அறுவடையையும் செய்ய முடியும்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X