பள்ளியில் ஆபாச வகுப்பு நடத்திய ஆசிரியர் போக்சோவில் கைது

Updated : செப் 15, 2022 | Added : செப் 15, 2022 | கருத்துகள் (27) | |
Advertisement
கன்னியாகுமரி :கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அரசு மேல்நிலைப்பள்ளியில் அக்கவுண்டன்சி வகுப்பில் ஆசிரியர் ஆபாச பாடம் நடத்தியவரை குளச்சல் அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர்.கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் பகுதியில் அரசு மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை சுமார் 1500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவியர்கள் பயின்று
கன்னியாகுமரி, பள்ளி மாணவிகள், போக்சோ, கிறிஸ்துதாஸ் , Kanyakumari, Schoolstudents, Pocso, Christhdas

கன்னியாகுமரி :கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அரசு மேல்நிலைப்பள்ளியில் அக்கவுண்டன்சி வகுப்பில் ஆசிரியர் ஆபாச பாடம் நடத்தியவரை குளச்சல் அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர்.



கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் பகுதியில் அரசு மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை சுமார் 1500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவியர்கள் பயின்று வருகின்றனர்.



இந்த நிலையில் அந்த பள்ளியில் அக்கவுண்டன்சி பிரிவில் 11-ம் மற்றும் 12-ம் வகுப்பிற்கு, பாடம் நடத்தும் ஆசிரியர் கிறிஸ்து தாஸ் என்பவர் வகுப்பறையில் மாணவ, மாணவிகளுக்கு ஆபாச வகுப்பு நடத்தி வந்ததார். சம்பவம் குறித்து மாணவிகள் தங்கள் பெற்றோரிடம் தெரிவித்த நிலையில், இது குறித்து சில மாணவிகள் குளச்சல் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகாரளிக்கப்பட்டு ஆசிரியர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.



இந்த நிலையில் கடந்த 6-ம் தேதி பள்ளிக்கு வந்த மாணவிகளின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பள்ளி தலைமை ஆசிரியர் அறையை முற்றுகையிட்டு ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆனால் ஆசிரியர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில், நேற்று மாணவர்கள் மற்றும் பெற்றோர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் அளித்தனர்.



இந்த நிலையில் ஆசிரியர் கிறிஸ்துதாஸ் மீது போக்சோ உள்ளிட்ட இரு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த, குளச்சல் அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது





வாசகர் கருத்து (27)

Ganesh Kumar 007 - THOOTHUKKUDI,இந்தியா
19-செப்-202209:39:44 IST Report Abuse
Ganesh Kumar 007 நாங்க போட்ட பிச்சை.........ஜார்ஜ் பொன்னைஆஹ் ......
Rate this:
Cancel
Unmai Vilambi - California,யூ.எஸ்.ஏ
15-செப்-202221:31:36 IST Report Abuse
Unmai Vilambi நம்ம நக்கற கோவாலு எங்க போனாரு? YOUTUBE ல கமெண்ட் போடுவாரே?
Rate this:
Cancel
Girija - Chennai,இந்தியா
15-செப்-202219:10:35 IST Report Abuse
Girija அண்ணனுக்கு எழுதி கொள்வது , நம் பள்ளியில் வேலை செய்யும் (ஜாக்டோஜியோ) பச்சைக்கிளி பாவம், அவன் மாணவர்கள் நன்கு படிக்க மிகவும் கடினமாக பாடம் எடுக்காமல் மஜாவாக பாடம் நடத்துகிறான். அவனுக்கு சினிமா ஹீரோ போல் பேண்ட் ஷர்ட் ஷூ கூலிங்கிளாஸ் வாங்கித்தரவும் . பச்சைக்கிளி வெய்யிலில் ஸ்கூலுக்கு மோட்டார் பைக்கில் வந்து கருத்துவிட்டான் அவனுக்கு உடனே கார் வாங்கித்தரவும், பள்ளியில் ஏ சி வசதிகள் செய்து தரவும். அரைநாள் வேலை செய்தால் போதும் என்று சொல்லவும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X