மலைக்கோட்டைக்கு அருகே பார்க்க வேண்டிய இடங்கள்...!

Updated : செப் 15, 2022 | Added : செப் 15, 2022 | |
Advertisement
திருச்சி என்றாலே பலருக்கும் சட்டென்று நினைவுக்கு வருவது மலைக்கோட்டை தான். 'திருச்சிக்கு செல்கிறேன்' என்பவர்களை விட 'மலைக்கோட்டைக்கு போகிறேன்' என்றே பலரும் கூறுவர். மலைக்கோட்டையை மையப்படுத்தியே திருச்சி நகரை அடையாளப்படுத்துவதில் பலருக்கு பெருமிதம் அதிகம். இந்த மலைகோட்டை நகரமான திருச்சிக்கு சென்றால் பார்க்க வேண்டிய இடங்கள்
puliyancholaifalls, trichy, malaikottai, touristplaces, tour, kallanaidam, திருச்சி, மலைக்கோட்டை, ஸ்ரீரங்கம், சுற்றுலா, புளியஞ்சோலை நீர்வீழ்ச்சி,

திருச்சி என்றாலே பலருக்கும் சட்டென்று நினைவுக்கு வருவது மலைக்கோட்டை தான். 'திருச்சிக்கு செல்கிறேன்' என்பவர்களை விட 'மலைக்கோட்டைக்கு போகிறேன்' என்றே பலரும் கூறுவர். மலைக்கோட்டையை மையப்படுத்தியே திருச்சி நகரை அடையாளப்படுத்துவதில் பலருக்கு பெருமிதம் அதிகம். இந்த மலைகோட்டை நகரமான திருச்சிக்கு சென்றால் பார்க்க வேண்டிய இடங்கள் சில...


மலைக்கோட்டை


மலைக்கோட்டை மீதிருந்து பார்த்தால் திருச்சி மாநகரின் அனைத்து பகுதியும் மிகவும் அழகாகக் காட்சியளிக்கும். குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் குடியிருப்பான் என்று கூறுவர். ஆனால் இங்கு மலைக்கோட்டையில் உச்சிப்பிள்ளையார் உட்கார்ந்துள்ளார். மலைக்கோட்டையை பார்க்காவிட்டால் பலருக்கும் சுற்றுலாவே களைக்கட்டாது. 275 அடி உயரமுள்ள இந்த மலையில் 417 படிக்கட்டுகள் ஏறிச் சென்றால் பிள்ளையாரை தரிசிக்கலாம். நடுவில் ஒரு மலையும், அதைச் சுற்றி கோட்டையும் கொண்டு அமைந்துள்ளதால் மலைக்கோட்டை என்று அழைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. மலையின் ஒரு பகுதியில் தாயுமானவர் சுவாமி கோவிலும் உள்ளது.


கல்லணைlatest tamil newsதிருச்சியின் முக்கிய சுற்றுலாத்தலங்களில் கல்லணை முக்கியமான ஒன்றாகும். கரிகால சோழ மன்னரால் காவிரி ஆற்றின் மீது கட்டப்பட்ட கல்லணை பழமையான அணையாகும். தற்போதும் பயன்பாட்டில் உள்ள பழமையான அணை இது என்பதில் ஆச்சரியப்பட வேண்டிய ஒன்றாகும். உலகின் மிகப்பழமையான நீர்ப்பாசனத் திட்டம் என்று பெருமிதப்படுவதும் குறிப்பிடத்தக்கது. மேலும், 1080 அடி, நீளமும் 66 அடி அகலமும், 18 அடி உயரமும் உள்ள இந்த கல்லணையின் அடித்தளம் மணலில் அமைக்கப்பட்டிருப்பது சிறப்பாகும். பல நூற்றாண்டுகளை கடந்தும் இன்னமும் உறுதியுடன் நிற்கும் இந்த கல்லணை, தமிழர்களின் கட்டுமான திறனை வியப்புடன் பார்க்க வைக்கிறது.


ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி கோவில்latest tamil newsபூலோகத்தின் வைகுண்டம் என்றழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமியை தரிசனம் செய்ய உலகின் பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். ரங்கநாதர் பாற்கடலில் பள்ளி கொண்ட கோலத்தில் அருள்பாலிக்கிறார். இங்குள்ள ராஜகோபுரம் இந்தியாவின் மிகப்பெரியது என்பது குறிப்பிடத்தக்கது.


புளியஞ்சோலை நீர்வீழ்ச்சிlatest tamil newsஅடர்ந்த காடுகள் சுற்றியுள்ள மலைப்பகுதியில் நீர்வீழ்ச்சியை ரசிக்க விரும்பும் இயற்கை ஆர்வலர்கள் புளியஞ்சோலைக்கு விசிட் செய்யலாம். கிழக்குத் தொடர்ச்சி மலையில் கொல்லிமலை அடிவாரத்தில் உள்ள இந்த நீர்வீழ்ச்சிக்கு புதுமணத் தம்பதியினரும் சுற்றுலாப் பயணிகளும் அதிகளவில் வருகை தருகின்றனர். அழகிய பச்சைப்பசேலென்ற காடுகளும், இயற்கை ஊற்றுகள், ஆறுகள், மலையேற்றம் என பல்வேறு சிறப்பம்சங்கள் இங்குள்ளன.


முக்கொம்பு


திருச்சி வரும் சுற்றுலாப் பயணிகள் கட்டாயமாக செல்ல விரும்பும் இடங்களில் ஒன்று முக்கொம்பு. கர்நாடகாவில் இருந்து வரும் காவிரி, இங்கு மூன்று முனைகளிலும் ஆறாக பிரிவதால் முக்கொம்பு என அழைக்கப்படுகிறது. ஆடிப்பெருக்கு தினத்தன்று புதுமணத் தம்பதிகளும், விரைவில் திருமணம் நடக்க வேண்டிய இளம் வயதினரும் இங்கு புனித நீராடி சிறப்பு வழிபாடு செய்வது குறிப்பிடத்தக்கது.


மேலும், சமயபுரம் மாரியம்மன் கோவில், விராலிமலை முருகன் கோவில், ஜம்புகேஸ்வரர் கோவில், எறும்பீஸ்வரர் கோவில் உட்பட பல்வேறு புண்ணியத்தலங்கள் இங்குள்ளன.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X