மின் கட்டண உயர்வை கண்டித்து அ.தி.மு.க.,வினர் ஆர்ப்பாட்டம்

Added : செப் 15, 2022 | |
Advertisement
தர்மபுரியில், மின் கட்டண உயர்வை கண்டித்து, அ.தி.மு.க., சார்பில் ஆர்ப்பாட்டம் நடக்க உள்ளது என, முன்னாள் அமைச்சர் அன்பழகன் எம்.எல்.ஏ., தெரிவித்துள்ளார்.இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:பொதுமக்கள் மற்றும் தொழில்துறைகளை மிகவும் பாதிக்கும் மின் கட்டண உயர்வை கண்டித்து, தர்மபுரி மாவட்ட, அ.தி.மு.க., சார்பில், நாளை வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடக்க உள்ளது. இதில், மின் கட்டண


தர்மபுரியில், மின் கட்டண உயர்வை கண்டித்து, அ.தி.மு.க., சார்பில்
ஆர்ப்பாட்டம் நடக்க உள்ளது என, முன்னாள் அமைச்சர் அன்பழகன்
எம்.எல்.ஏ., தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
பொதுமக்கள் மற்றும் தொழில்துறைகளை மிகவும் பாதிக்கும் மின் கட்டண உயர்வை கண்டித்து, தர்மபுரி மாவட்ட, அ.தி.மு.க., சார்பில், நாளை வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடக்க உள்ளது. இதில், மின் கட்டண உயர்வை, தமிழக அரசு உடனே திரும்பப்பெற வலியுறுத்தியும், தேர்தல் அறிக்கையில், தி.மு.க., அறிவித்த திட்டங்களை செயல்படுத்தாததை கண்டித்தும், ஆர்ப்பாட்டம் நடக்க உள்ளது.
தர்மபுரி டவுன் பி.எஸ்.என்.எல்., அலுவலகம் முன், நாளை காலை, 10:00 மணிக்கு நடக்கும் இந்த ஆர்ப்பாட்டத்தில், தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த, அ.தி.மு.க., தலைமைக்கழக நிர்வாகிகள், முன்னாள், இந்நாள் எம்.எல்.ஏ.,க்கள், கட்சியின் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூராட்சி, ஊராட்சி, கிளை மற்றும் வார்டு நிர்வாகிகள், சார்பு அமைப்பு பொறுப்பாளர்கள், கட்சித்தொண்டர்கள், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் திரளாக வந்து கலந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X