அஞ்சல் துறை சார்பில் கடிதம் எழுதும் போட்டி

Added : செப் 15, 2022 | |
Advertisement
ஈரோடு: அஞ்சல் துறை சார்பில், தேசிய அளவில் கடிதம் எழுதும் போட்டியில் விருப்பம் உள்ளவர்கள் அக்., 31க்குள் கடிதம் அனுப்பலாம் என, ஈரோடு முதுநிலை அஞ்சலக கண்காணிப்பாளர் கோபாலன் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு: அஞ்சல் துறை சார்பில், தேசிய அளவில் கடிதம் எழுதும் போட்டி நடக்கிறது. இதில், '2047ல் இந்தியா ஒரு பார்வை' என்ற தலைப்பில் தமிழ், ஆங்கிலம்,


ஈரோடு:
அஞ்சல் துறை சார்பில், தேசிய அளவில் கடிதம் எழுதும் போட்டியில் விருப்பம் உள்ளவர்கள் அக்., 31க்குள் கடிதம் அனுப்பலாம் என, ஈரோடு முதுநிலை அஞ்சலக கண்காணிப்பாளர் கோபாலன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு: அஞ்சல் துறை சார்பில், தேசிய அளவில் கடிதம் எழுதும் போட்டி நடக்கிறது. இதில், '2047ல் இந்தியா ஒரு பார்வை' என்ற தலைப்பில் தமிழ், ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளில் ஏதேனும் ஒரு மொழியில் கடிதம் எழுதலாம். 18 வயதுக்குட்பட்டவர்கள், 18 வயதுக்கு மேற்பட்டவர்கள்பங்கேற்கலாம். இன்லாண்ட் லெட்டர், என்வலப் லெட்டர் என, ஏதாவது ஒன்றில் கடிதம் எழுதலாம். என்வலப் பிரிவில், 'ஏ4' அளவு வெள்ளை தாளில், 1,000 வார்த்தைகளுக்கு மிகாமலும், இன்லாண்ட் லெட்டர் பிரிவில், 500 வார்த்தைகளுக்கு மிகாமலும் கடிதம் எழுதி அனுப்ப வேண்டும். எழுதப்பட்ட கடிதத்தை, 'முதன்மை அஞ்சல் துறை தலைவர், தமிழ்நாடு வட்டம், சென்னை -600 002' என்ற முகவரிக்கு, 'Dai Akhar' அஞ்சல் துறை கடித போட்டி-2022-23 என குறிப்பிட்டு, அருகில் உள்ள தபால் அலுவலகங்களில் வழங்கலாம். கடிதங்களை அக்., 31க்குள் அனுப்ப வேண்டும்.
போட்டியாளர்கள், தங்கள் கடிதத்தில், 2022, ஜன., 1ன்படி, 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் அல்லது, 18 வயதுக்கு மேற் உடையவர் என்ற சான்று இணைத்து அனுப்ப வேண்டும். மாநில அளவில் பரிசு பெறும் மூன்று கடிதங்களின் விபரம் டிச., 25ல் அறிவிக்கப்படும். பின், தேசிய அளவில் பரிசு பெறும் கடிதம் அறிவிக்கப்படும்.
இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X