போலீஸ் டைரி - சேலம்

Added : செப் 15, 2022 | |
Advertisement
ஓட்டலில் தாக்குதல்; 3 பேர் கைதுஆத்துார்: பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே, ராணிப்பேட்டை சாலையில் விஷ்ணு, 30, என்பவர், ஓட்டல் நடத்துகிறார். அங்கு நேற்று முன்தினம் சென்ற சிலர் தகராறு செய்து தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் விஷ்ணு காயம் அடைந்தார். அவர் புகார்படி, ஆத்துார், கோட்டையை சேர்ந்த, சமையல் ஒப்பந்தாரர் செல்வம், 38, பிரகாஷ், 25, ராஜ்குமார், 28, ஆகியோரை, ஆத்துார் டவுன் போலீசார் நேற்று கைது

ஓட்டலில் தாக்குதல்; 3 பேர் கைது
ஆத்துார்: பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே, ராணிப்பேட்டை சாலையில் விஷ்ணு, 30, என்பவர், ஓட்டல் நடத்துகிறார். அங்கு நேற்று முன்தினம் சென்ற சிலர் தகராறு செய்து தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் விஷ்ணு காயம் அடைந்தார். அவர் புகார்படி, ஆத்துார், கோட்டையை சேர்ந்த, சமையல் ஒப்பந்தாரர் செல்வம், 38, பிரகாஷ், 25, ராஜ்குமார், 28, ஆகியோரை, ஆத்துார் டவுன் போலீசார் நேற்று கைது செய்தனர்.
ரயிலில் அடிபட்டு வாலிபர் பலி
ஆத்துார்: நரசிங்கபுரம், தமிழரசன் நகர் குடியிருப்பு பகுதியை சேர்ந்த, மணி மகன் சதீஷ், 26. மன வளர்ச்சி குன்றிய நிலையில் இருந்தார். நேற்று காலை, 5:00 மணிக்கு, சேலம் - விருதாசலம் அகல ரயில் பாதை வழியே சென்றார். அப்போது, சென்னை எழும்பூர் - சேலம் எக்ஸ்பிரஸ் ரயிலில் அடிபட்டு, அவர் உயிரிழந்தார். சேலம் ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.
உறுப்பினரை தாக்கியவர் கைது
வாழப்பாடி: முத்தம்பட்டியில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்தில், கடந்த, 11 இரவு, 7:00 மணிக்கு, திருமண்டல குழு பொருளாளர், செயலர் பதவிக்கு தேர்தல் நடந்தது. அதில் போட்டியிடும் விவகாரத்தில் அதே பகுதியை சேர்ந்த, முத்தம்பட்டி ஊராட்சி, 5வது வார்டு, அ.தி.மு.க., கவுன்சிலர் பரிமளா, 38, என்பவரை, 5 பேர் தாக்கியதாக கூறி, அவர், வாழப்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று பரிமளா புகார்படி, வாழப்பாடி போலீசார், அதே பகுதியை சேர்ந்த ரஞ்சித்குமார், 42, என்பவரை கைது செய்தனர். மேலும், 4 பேரை தேடுகின்றனர்.
வீடு முன் நிறுத்திய பைக் திருட்டு
சேலம்: அஸ்தம்பட்டி, ராஜாராம் நகரை சேர்ந்தவர் செல்வராஜ், 48. இவரது, 'டி.வி.எஸ்., மேக்ஸ் - 100' பைக், கடந்த, 9 மாலை, வீட்டின் முன் நிறுத்தியிருந்த நிலையில் மாயமானது. அவர் புகார்படி, அஸ்தம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
குழந்தையுடன் தாய் மீட்பு
சேலம்: செவ்வாய்ப்பேட்டை, காட்டு முனியப்பன் கோவில் தெருவை சேர்ந்த, சீனிவாசன் மனைவி ஸ்ரீதேவி, 27. இவர்களது மகன் பத்மேஷ், 2. தம்பதி இடையே நேற்று முன்தினம் காலை தகராறு ஏற்பட்டது. இதில் ஸ்ரீதேவி கோபித்துக்கொண்டு, மகனை துாக்கிக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறினார். மாலை வரை திரும்பாததால், சீனிவாசன் புகார்படி செவ்வாய்ப்பேட்டை போலீசார் தேடினர். அப்போது உறவினர் வீட்டில் இருந்த ஸ்ரீதேவி, குழந்தையை மீட்டு, கணவரிடம் ஒப்படைத்தனர்.
கல்லுாரி மாணவி மாயம்
சேலம்: ஏற்காடு, லேடீஸ் சீட்டை சேர்ந்த வெங்கடேசன் மகள் ஆர்த்தி, 19. இவர், சேலம், சுக்கம்பட்டி கோமாளி வட்டத்தில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி, திருச்செங்கோட்டில் உள்ள தனியார் கல்லுாரியில், பி.எஸ்சி., முதலாம் ஆண்டு படிக்கிறார். கடந்த, 12ல் கல்லுாரி சென்ற அவர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து வெங்கடேசன் புகார்படி வீராணம் போலீசார் தேடுகின்றனர்.
தி.மு.க., - எம்.பி., மீது புகார்
சேலம்: பா.ஜ., மாநில செயற்குழு உறுப்பினர் கோபிநாத் தலைமையில் நிர்வாகிகள், நேற்று போலீஸ் துணை கமிஷனர் லாவண்யாவிடம் அளித்த புகார் மனு: முன்னாள் மத்திய அமைச்சர், தி.மு.க., - எம்.பி., ராசா, சென்னை, பெரியார் திடலில் நடந்த நிகழ்ச்சியில், இந்துக்களை இழிவுபடுத்தி பேசி உள்ளார். அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கம்பி குத்தி லாரி உரிமையாளர் பலி
தலைவாசல்: கள்ளக்குறிச்சி மாவட்டம், மேலுார், வினைதீர்த்தாபுரத்தை சேர்ந்தவர் செந்தில்குமார், 37. லாரி உரிமையாளரான இவர், நேற்று மாலை, 4:10 மணிக்கு, தலைவாசல், பாலிமேடு வழியே, 'கிளாமர்' பைக்கில் சென்றுகொண்டிருந்தார். அப்போது, ஆத்துாரில் இருந்து கள்ளக்குறிச்சி நோக்கி, கட்டுமானப்பணிக்கு இரும்பு கம்பி ஏற்றிச்சென்ற டிராக்டர் பின்புறம், செந்தில்குமார் ஓட்டிச்சென்ற பைக் மோதியது. அதில், கம்பிகள் குத்தி, செந்தில்குமார் சம்பவ இடத்தில் உயிரிழந்தார். தலைவாசல் போலீசார் விசாரிக்கின்றனர்.
'போக்சோ'வில் சிக்கிய தொழிலாளி
தாரமங்கலம்: ஜலகண்டாபுரம், புடையன் தெருவை சேர்ந்தவர் முருகன், 22. தறித்தொழிலாளி. அதே பகுதியை சேர்ந்த, பிளஸ் 2 படிக்கும், 17 வயது மாணவி, அவரது பெற்றோருடன், கடந்த ஆக., 10ல் தாரமங்கலத்தில் உள்ள உறவினர் வீட்டில் இருந்து கண்ணனுார் மாரியம்மன் கோவிலுக்கு சென்றார். அப்போது முருகன், மாணவியை அழைத்துச்சென்றுள்ளார். இதுகுறித்து, பெற்றோர் மறுநாள் அளித்த புகார்படி, தாரமங்கலம் போலீசார் விசாரித்தனர். இதையடுத்து, ஓமலுார் மகளிர் போலீசார், நேற்று, 'போக்சோ' சட்டத்தில் முருகனை கைது செய்தனர்.
துக்கத்தால் 'ஆப்பரேட்டர்' விபரீதம்
ஓமலுார்: கோட்டமேட்டுப்பட்டியை சேர்ந்தவர் சிவக்குமார், 46. ஊராட்சி டேங்க் ஆப்பரேட்டராக பணிபுரிந்தார். இவரது மனைவி சிவகாமி. இவர்களுக்கு இரு மகன்கள் உள்ளனர். 20 நாளுக்கு முன், ஓமலுாரில் நடந்த சாலை விபத்தில் சிவகாமி உயிரிழந்தார். இதில் மனமுடைந்து காணப்பட்ட சிவக்குமார், நேற்று முன்தினம் விஷம் குடித்தார். அவரை, உறவினர்கள் மீட்டு, சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அங்கு அவர் உயிரிழந்தார். ஓமலுார் போலீசார் விசாரிக்கின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X