மாயனூர் கதவணைக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு

Added : செப் 15, 2022 | |
Advertisement
கரூர்: காவியாற்றில், மாயனுார் கதவணைக்கு வரும் தண்ணீரின் அளவு நேற்று அதிகரித்தது.கரூர் மாவட்டம், மாயனுார் கதவணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு, 39 ஆயிரத்து, 755 கன அடி தண்ணீர் வந்தது. நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி விநாடிக்கு, 46 ஆயிரத்து, 957 கன அடியாக தண்ணீர் வரத்து அதிகரித்தது. டெல்டா பாசன சாகுபடிக்காக, காவிரியாற்றில், 45 ஆயிரத்து, 537 கன அடி தண்ணீரும், நான்கு பாசன வாய்க்காலில், 1,420


கரூர்: காவியாற்றில், மாயனுார் கதவணைக்கு வரும் தண்ணீரின் அளவு நேற்று அதிகரித்தது.
கரூர் மாவட்டம், மாயனுார் கதவணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு, 39 ஆயிரத்து, 755 கன அடி தண்ணீர் வந்தது. நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி விநாடிக்கு, 46 ஆயிரத்து, 957 கன அடியாக தண்ணீர் வரத்து அதிகரித்தது. டெல்டா பாசன சாகுபடிக்காக, காவிரியாற்றில், 45 ஆயிரத்து, 537 கன அடி தண்ணீரும், நான்கு பாசன வாய்க்காலில், 1,420 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டுள்ளது.
அமராவதி அணை
திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை, அமராவதி அணைக்கு, நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி விநாடிக்கு, 1,166 கன அடி தண்ணீர் வந்தது. அமராவதி ஆற்றில் வினாடிக்கு, 600 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.
கரூர் அருகே பெரிய ஆண்டாங்கோவில் தடுப்பணைக்கு வினாடிக்கு, 1,477 கன அடி தண்ணீர் வந்தது. புதிய பாசன வாய்க்காலில், தண்ணீர் திறப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. ஷட்டர்கள் மூலம், 9 கன அடி தண்ணீர் வெளியேறியது. 90 அடி உயரம் கொண்ட, அணையின் நீர்மட்டம், 88.46 அடியாக
இருந்தது.
நங்காஞ்சி அணை
திண்டுக்கல் மாவட்டம், நங்காஞ்சி அணைக்கு வடகாடு மலைப் பகுதிகளில் மழை இல்லாததால், நேற்று காலை, நிலவரப்படி தண்ணீர் வரத்து இல்லை. 39.37 அடி உயரம் கொண்ட, அணையின் நீர்மட்டம், 33.26 கன அடியாக
இருந்தது.
ஆத்துப்பாளையம் அணை
கரூர் மாவட்டம், க.பரமத்தி அருகே, கார்வாழி ஆத்துப்பாளையம் அணைக்கு, நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி, விநாடிக்கு, 63 கன அடி தண்ணீர் வந்தது. 26.90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம், 23.45 அடியாக இருந்தது. அணையில் இருந்து, நொய்யல் ஆற்றில் வினாடிக்கு, 50 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X