விதவிதமான புடவையில் அசால்டாக ஜொலிப்பதே டிரெண்ட்| Dinamalar

விதவிதமான புடவையில் அசால்டாக ஜொலிப்பதே டிரெண்ட்

Updated : செப் 15, 2022 | Added : செப் 15, 2022 | |
பிரபலங்கள் என்றால் அல்ட்ரா மாடர்ன் ஆகத்தான் உடைகளை அணிய வேண்டும் என்பது பலரின் தவறான கணிப்பாக உள்ளது. ஆனால், பேஷன் உலகில் புடவைகளுக்கான வரவேற்பு என்றுமே குறைவதில்லை. அந்தந்த காலகட்டத்துக்கேற்ப பாரம்பரியத்தை விட்டுத் தராமல், ஸ்டைலாக புடவைகளை அணிவதே தற்போதைய டிரெண்ட். அதற்கேற்ப பேஷன் டிசைனர்களும் வடிவமைப்பில் முக்கியத்துவம் அளிக்கின்றனர். விழாக்கள்
fashion, dress, saree, vani bhojan, sai pallavi, பேஷன், புடவை, வாணிபோஜன், சாய்பல்லவி, உடைகள்,

பிரபலங்கள் என்றால் அல்ட்ரா மாடர்ன் ஆகத்தான் உடைகளை அணிய வேண்டும் என்பது பலரின் தவறான கணிப்பாக உள்ளது. ஆனால், பேஷன் உலகில் புடவைகளுக்கான வரவேற்பு என்றுமே குறைவதில்லை. அந்தந்த காலகட்டத்துக்கேற்ப பாரம்பரியத்தை விட்டுத் தராமல், ஸ்டைலாக புடவைகளை அணிவதே தற்போதைய டிரெண்ட்.


latest tamil newsஅதற்கேற்ப பேஷன் டிசைனர்களும் வடிவமைப்பில் முக்கியத்துவம் அளிக்கின்றனர். விழாக்கள் மற்றும் செல்லும் இடங்களுக்கேற்ப எம்பிராய்டரி, அலங்கார கற்கள் உட்பட பல்வேறு அழகிய வேலைப்பாடுகளுடன் புடவைகள் வடிவமைக்கப்படுகின்றன. பிரபலங்கள் பலரும் விதவிதமான புடவைகளை உடுத்தி, தங்களின் அழகிய பல புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் அள்ளித் தெறிப்பதிலேயே இதை உணரலாம்.latest tamil newsமுக்கிய தினங்கள் மற்றும் விழாக்களுக்கு செல்லும் போது பெரும்பாலும் புடவை அணிவதையே நடிகை சாய்பல்லவி வழக்கமாக வைத்துள்ளார். மற்ற உடைகளை விட புடவை உடுத்தும் போது, மிகவும் சவுகரியமாக உணர்வதாக ஒரு பேட்டியில் இவர் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

சில மாதங்களுக்கு முன்பு நடந்த கேன்ஸ் திரைப்பட விழாவில், தீபிகா படுகோன் ஸ்டைலாக புடவை கட்டி அசத்தியது அனைவரும் அறிந்ததே.latest tamil newsசமீபத்தில் நடிகை வாணி போஜன் நீல நிற காட்டன் புடவையில் கடற்கரையில் நின்றவாறு எடுத்த புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார். சின்னத்திரையில் பிரபலமான இவர், திரையுலகிலும் முக்கிய இடத்தை பிடிக்க போராடி வருவது குறிப்பிடத்தக்கது. சின்னத்திரை நயன்தாரா என ரசிகர்கள் இவரை செல்லமாக அழைக்கும் நிலையில், விதவிதமான உடைகளில் புகைப்படங்களை பதிவிடுவது வழக்கமாக உள்ளது. மாடர்ன் உடைகளுக்கு நிகராக புடவைகளுக்கும் இவர் முக்கியத்துவம் அளிப்பது இவரின் சமூக வலைத்தள பக்கத்தைப் பார்த்தாலே அனைவரும் உணரலாம்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X