ஆவணங்கள் இன்றி வரப்பட்ட43 டன் நெல் மூட்டைகள் பறிமுதல்

Added : செப் 15, 2022 | |
Advertisement
தஞ்சாவூர்:திருச்சி மண்டலத்தில், ஆவணங்கள் இன்றி லாரியில் ஏற்றி வந்த 43 டன் நெல் மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது.குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை டி.ஜி.பி., அபாஸ்குமார், தஞ்சாவூர் அருகே, மருங்குளத்தில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையம் மற்றும் தனியார் நவீன அரிசி ஆலைகளில் ஆய்வு செய்தார். அதன் பின், அவர் நிருபர்களிடம் கூறியதாவது;வெளி மாவட்டங்களில் இருந்து

தஞ்சாவூர்:திருச்சி மண்டலத்தில், ஆவணங்கள் இன்றி லாரியில் ஏற்றி வந்த 43 டன் நெல் மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை டி.ஜி.பி., அபாஸ்குமார், தஞ்சாவூர் அருகே, மருங்குளத்தில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையம் மற்றும் தனியார் நவீன அரிசி ஆலைகளில் ஆய்வு செய்தார். அதன் பின், அவர் நிருபர்களிடம் கூறியதாவது;
வெளி மாவட்டங்களில் இருந்து இடைத் தரகர்கள் மூலம், உரிய ஆவணங்கள் இல்லாமல், நெல் மூட்டைகள் எடுத்து வருவதையும், அரிசி ஆலைகளில் முறைகேடுகள் நடைபெறாமல் கண்காணிக்கவும் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறையினர் ஆய்வு நடத்தி வருகின்றனர்.திருச்சி மண்டலத்துக்கு உட்பட்ட ஒன்பது மாவட்டங்களில், பல்வேறு சோதனைச் சாவடிகள் மற்றும் மாவட்ட எல்லைகளிலும் கடந்த மூன்று நாட்களாக தீவிர வாகன சோதனை செய்யப்பட்டது.
இதில், தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் இருந்து எந்த ஆவணங்களும் இல்லாமல் 29.50 டன் நெல் ஏற்றி வந்த இரண்டு லாரிகளை பிடித்து, நுகர் பொருள் வாணிப கழக துணை மேலாளர் வசம் ஒப்படைக்கப்பட்டது. இதே போல திருச்சி மண்டலத்தில் இருந்து மொத்தம் 43 டன் நெல் மூட்டைகள் ஏற்றி வந்த மூன்று லாரிகளை பிடித்து, லாரி டிரைவர்களிடம் தீவிர விசாரணை செய்யப்படுகிறது.
கருர் மாவட்டம், குளித்தலை அருகே பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1.05 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது, என்றார். ஆய்வின் போது திருச்சி மண்டல எஸ்.பி., சுஜாதா, தஞ்சாவூர் உட்கோட்ட தமிழ்நாடு நுகர் பொருள் வாணிப கழக துணை மேலாளர் முத்தையா உடன் இருந்தனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X