கம்பெடுத்து சொல்லி அடித்த வீரர்கள்:மாநில சிலம்ப போட்டியில் 'வாவ்' பர்பாமன்ஸ்

Added : செப் 15, 2022 | |
Advertisement
கோவை:தமிழ்நாடு அமெச்சூர் சிலம்பம் சங்கம் மற்றும் கற்பகம் நிகர்நிலை பல்கலை இணைந்து நடத்தும், மாநில அளவிலான சப்- ஜூனியர் சிலம்ப போட்டி, ஈச்சனாரி கற்பகம் பல்கலையில் நடந்தது. இப்போட்டியில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, 700க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் பங்கேற்றுள்ளனர்.வீரர்களுக்கு ஒன்பது எடை பிரிவுகளில், கம்பு வீச்சு, அலங்கார வீச்சு, வேல்கம்பு வீச்சு, வாள்
கம்பெடுத்து சொல்லி அடித்த வீரர்கள்:மாநில சிலம்ப போட்டியில் 'வாவ்' பர்பாமன்ஸ்

கோவை:தமிழ்நாடு அமெச்சூர் சிலம்பம் சங்கம் மற்றும் கற்பகம் நிகர்நிலை பல்கலை இணைந்து நடத்தும், மாநில அளவிலான சப்- ஜூனியர் சிலம்ப போட்டி, ஈச்சனாரி கற்பகம் பல்கலையில் நடந்தது. இப்போட்டியில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, 700க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் பங்கேற்றுள்ளனர்.வீரர்களுக்கு ஒன்பது எடை பிரிவுகளில், கம்பு வீச்சு, அலங்கார வீச்சு, வேல்கம்பு வீச்சு, வாள் வீச்சு, சுருள் வாள் வீச்சு உள்ளிட்ட, 13 போட்டிகள் நடத்தப்படுகின்றன.


* மாணவர்கள் பிரிவு


வேல்கம்பு வீச்சு போட்டியில் கடலுாரின் சந்தானகிருஷ்ணன், விருதுநகரின் விஷ்வராஜா; ஒற்றை வாள்வீச்சு போட்டியில் திருநெல்வேலியின் சுபாஷ், ஈரோட்டின் சஞ்சய்; ஒற்றை சுருள் வாள் வீச்சில் கோவையின் சர்வேஷ், சென்னையின் ரோகித்; இரட்டை கம்பு வீச்சில் தர்மபுரியின் வினையன், திருவள்ளூவரின் சந்தீப்; இரட்டை சுருள் வாள் பிரிவில் சென்னையின் சேஷா, கோவையின் ராகுல் ஆகியோர் முதல் இரண்டு இடங்களை பிடித்தனர்.


* மாணவிகள் பிரிவு


குத்து வரிசை போட்டியில் ஈரோட்டின் தர்ஷிதா, திருநெல்வேலியின் நந்தினி, கம்பு வீச்சில் திருநெல்வேலியின் மதுஜா, கரூரின் ஹகனா; அலங்கார வீச்சில் தர்மபுரியின் கீர்த்தி அக்ஷயா, கோவையின் கற்பகா; வேல் கம்பு வீச்சில் திருநெல்வேலியின் இலக்கியா, துாத்துக்குடியின் ஸ்ரீவர்ஷா ஆகியோர் முதல், இரண்டு இடங்களை பிடித்தனர்.வெற்றி பெற்ற வீரர்- வீராங்கனைகளுக்கு பதக்கம், சான்றிதழ் வழங்கப்பட்டது. முதலிடம் பிடித்த வீரர்கள் தேசிய போட்டிக்கு, தேர்வு செய்யப்படுகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X