போலீஸ் டைரி...: திருவள்ளூர்

Added : செப் 15, 2022 | |
Advertisement
விபத்தில் விவசாயி பலிதிருவள்ளூர்: காஞ்சிப்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜகோபால், 57. விவசாய கூலி. இவர், கடந்த 12ம் தேதி, கைவண்டூரில் உள்ள விவசாய நிலத்தில் நெல் அறுவடை பணிக்கு சென்றார். அப்போது, வயலில் இருந்த டிராக்டரில் அமர்ந்து கொண்டிருந்த போது, நெல் அறுவடை இயந்திரம் அவர் மீது மோதியது.இதில் பலத்த காயமடைந்த ராஜகோபால், திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

விபத்தில் விவசாயி பலி

திருவள்ளூர்: காஞ்சிப்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜகோபால், 57. விவசாய கூலி. இவர், கடந்த 12ம் தேதி, கைவண்டூரில் உள்ள விவசாய நிலத்தில் நெல் அறுவடை பணிக்கு சென்றார். அப்போது, வயலில் இருந்த டிராக்டரில் அமர்ந்து கொண்டிருந்த போது, நெல் அறுவடை இயந்திரம் அவர் மீது மோதியது.இதில் பலத்த காயமடைந்த ராஜகோபால், திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு, நேற்று முன்தினம் அவர் இறந்து விட்டார். இதுகுறித்து, அவரது மகன் சதீஷ் அளித்த புகாரையடுத்து, திருவள்ளூர் தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.
சூதாட்டம் நடத்திய 5 பேர் கைது
திருவள்ளூர்: திருவள்ளூர் டவுன் போலீசார் நேற்று, திருவள்ளூர் நகரில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். பெரியகுப்பம் பகுதியில், சிலர் சூதாட்டம் நடத்திக் கொண்டிருந்தனர். இதையடுத்து, போலீசார், சூதாட்டம் நடத்திய, ஸ்ரீபெரும்புதுார் டில்லிபாபு 32, ராகுல் 20, வேப்பம்பட்டு பிரவீன்குமார் 32, புதுச்சேரி தினகரன் 23, நன்மங்கலம் விஜயகன் 46, ஆகிய ஐந்து பேரையும் கைது செய்தனர்.அவர்களிடம் இருந்து, 29 பில் புக், 10 ஆயிரத்து 460 ரூபாய் பணம் மற்றும் ஆறு கால்குலேட்டர் ஆகியவற்றை பறிமுதல் செய்து, விசாரிக்கின்றனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X