சாலை அமைக்க 'வனம்' அனுமதி செம்பாக்கத்தில் பணி விறுவிறுப்பு

Added : செப் 15, 2022 | |
Advertisement
செங்கல்பட்டு:திருப்போரூர் அடுத்த செம்பாக்கம் பகுதியில், வனத்துறை வழியாக நெடுஞ்சாலைத் துறை சாலை செல்கிறது. இந்த சாலை பழுதடைந்து, போக்குவரத்துக்கு பயனற்ற நிலையில் இருந்தது.பள்ளி, கல்லுாரி மாணவர்களின் கல்வி மற்றும் மருத்துவம், அத்தியாவசிய பணிக்கு செல்வோர் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.செம்பாக்கத்தில் சாலை அமைக்க வேண்டும் என, கலெக்டர் மற்றும் நெடுஞ்சாலைத் துறையிடம்,
சாலை அமைக்க 'வனம்' அனுமதி செம்பாக்கத்தில் பணி விறுவிறுப்பு

செங்கல்பட்டு:திருப்போரூர் அடுத்த செம்பாக்கம் பகுதியில், வனத்துறை வழியாக நெடுஞ்சாலைத் துறை சாலை செல்கிறது. இந்த சாலை பழுதடைந்து, போக்குவரத்துக்கு பயனற்ற நிலையில் இருந்தது.பள்ளி, கல்லுாரி மாணவர்களின் கல்வி மற்றும் மருத்துவம், அத்தியாவசிய பணிக்கு செல்வோர் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

செம்பாக்கத்தில் சாலை அமைக்க வேண்டும் என, கலெக்டர் மற்றும் நெடுஞ்சாலைத் துறையிடம், கிராமத்தினர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.இது குறித்து நம் நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து, சாலை அமைக்க வனத்துறையிடம் அனுமதி கோரி, 2018ல் கலெக்டர் பரிந்துரைத்தார்.

வனத்துறை அனுமதியை தொடர்ந்து, 2019 - 20ம் நிதி ஆண்டில், 19.75 லட்சம் ரூபாய் நிதியை, அரசு ஒதுக்கீடு செய்தது.இதையடுத்து நெடுஞ்சாலைத் துறை, சாலை பணியை ஒட்டி மரக்கன்றுகள் நட, 12.46 லட்சம் ரூபாயை வனத்துறைக்கு வழங்கியது.

தற்போது, செம்பாக்கத்தில் சாலை அமைக்கப்பட்டு வருகிறது. 400 மீட்டரில் நடக்கும் பணியை, நெடுஞ்சாலைத் துறையினர் விறுவிறுப்பாக செய்கின்றனர்.பெயர் வெளியிட விரும்பாத நெடுஞ்சாலைத் துறை அதிகாரி கூறியதாவது:செம்பாக்கத்தில், ஐந்தாண்டுகளுக்கு பின் சாலை அமைக்கப்படுகிறது. வனத்துறை அனுமதியை தொடர்ந்து, பணி வேகமாக நடந்து வருகிறது. ஒரு மாதத்திற்குள் முடித்து, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விடப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X