டவுட் தனபாலு| Dinamalar

சிறப்பு பகுதிகள்

டவுட் தனபாலு

'டவுட்' தனபாலு

Added : செப் 15, 2022 | கருத்துகள் (3) | |
மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி: தமிழகத்தில், 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது. ஆனால், கேரளாவில், 100 யூனிட் பயன்படுத்தினால், 385 ரூபாய் செலுத்த வேண்டும். 200 யூனிட் வரை பயன்படுத்துவோர், இங்கு, 225 ரூபாய் செலுத்தும் நிலையில், கேரளாவில், 775 ரூபாய் செலுத்த வேண்டும். ஒவ்வொரு பிரிவுக்கும் கேரளாவில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மின் கட்டண உயர்வு தொடர்பாக

'டவுட்' தனபாலு


மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி:

தமிழகத்தில், 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது. ஆனால், கேரளாவில், 100 யூனிட் பயன்படுத்தினால், 385 ரூபாய் செலுத்த வேண்டும். 200 யூனிட் வரை பயன்படுத்துவோர், இங்கு, 225 ரூபாய் செலுத்தும் நிலையில், கேரளாவில், 775 ரூபாய் செலுத்த வேண்டும். ஒவ்வொரு பிரிவுக்கும் கேரளாவில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மின் கட்டண உயர்வு தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள மார்க்சிஸ்ட் மாநில செயலர், கேரளாவுடன் ஒப்பிட்டு பார்த்து பேச வேண்டும்.

டவுட் தனபாலு: தி.மு.க., கூட்டணியில் இருந்தால், அரசின் எல்லா முடிவுகளுக்கும் ஆமாஞ்சாமி போடணும்னு நீங்க எதிர்பார்ப்பது, 'டவுட்'டே இல்லாமல் தெரியுது!


தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை
: தி.மு.க., ஆட்சியின் மீது, மக்களின் அவநம்பிக்கை அதிகரித்து வருவதை திசை திருப்பும் வகையில், முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, விஜயபாஸ்கர் வீடுகளில், லஞ்ச ஒழிப்பு துறையினர் தொடர்ந்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கு முன் செய்த சோதனைக்கே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாமல் இருக்கும் போது, புது சோதனைகளின் அடிப்படை நோக்கம் என்ன?

டவுட் தனபாலு: இப்ப என்ன சொல்ல வர்றீங்க... ஏற்கனவே நடத்திய சோதனைகளின் தொடர் நடவடிக்கையா, 'மாஜி'க்கள் மீது சட்டுபுட்டுன்னு குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யுங்கன்னு, அரசை துாண்டி விடுறீங்களோன்னு, 'டவுட்' எழுதே!


தமிழக சட்டத் துறை அமைச்சர் ரகுபதி:
மருத்துவ படிப்புக்கான, 'நீட்' தேர்வு விலக்கு சட்ட மசோதாவுக்கு, நல்ல முடிவு வரும் என எதிர்பார்க்கிறோம். பல்கலை துணைவேந்தர்களை, மாநில அரசே நியமிக்க வழிவகை செய்யும் சட்ட மசோதாவுக்கு, கவர்னர் மாளிகையில் இருந்து, இதுவரை எந்த பதிலும் கிடைக்கப் பெறவில்லை.

டவுட் தனபாலு: கவர்னரது அதிகாரத்தை பறிக்கும் மசோதாவுக்கு, அவரே ஒப்புதல் தருவார்னு எதிர்பார்க்கிற அளவுக்கு, 'அரசியல் அப்பாவி'யா நீங்க என்ற, 'டவுட்' கிளம்புதே!

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X