சிறப்பு பகுதிகள்

இது உங்கள் இடம்

நிதிஷ் கனவு பகல் கனவாகும்!

Added : செப் 15, 2022 | கருத்துகள் (3) | |
Advertisement
நிதிஷ் கனவு பகல் கனவாகும்! க.ஸ்ரீதர், கல்லிடைக்குறிச்சி, நெல்லை மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: பீஹார் மாநிலத்தில், 2020ல் நடந்த சட்டசபை தேர்தலில், நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி, குறைவான இடங்களை பெற்றிருந்த போதும், அவருக்கு முதல்வர் பதவி தந்து கவுரவித்தது, பா.ஜ., மேலிடம்.ஆனாலும், பா.ஜ., கூட்டணியை சமீபத்தில் முறித்து, மீண்டும் லாலு


நிதிஷ் கனவு பகல் கனவாகும்!க.ஸ்ரீதர், கல்லிடைக்குறிச்சி, நெல்லை மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: பீஹார் மாநிலத்தில், 2020ல் நடந்த சட்டசபை தேர்தலில், நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி, குறைவான இடங்களை பெற்றிருந்த போதும், அவருக்கு முதல்வர் பதவி தந்து கவுரவித்தது, பா.ஜ., மேலிடம்.ஆனாலும், பா.ஜ., கூட்டணியை சமீபத்தில் முறித்து, மீண்டும் லாலு கட்சியுடன் இணைந்து, ஆட்சியில் அமர்ந்துள்ளார் நிதிஷ்குமார்; அத்துடன், நாடு முழுதும் உள்ள எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார். இதன் ஒரு பகுதியாக, சமீபத்தில் டில்லி சென்று ராகுல், கெஜ்ரிவால், யெச்சூரி உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து பேசியுள்ளார்.
சொந்த மாநிலத்திலேயே, இவரின் ஐ.ஜ.த., கட்சி பெரும்பான்மை பெற்று, தனித்து ஆட்சி அமைக்க முடியவில்லை. பா.ஜ., மற்றும் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்து தான், இதுவரை பதவியில் இருந்துள்ளார் நிதிஷ். அப்படிபட்டவர், பலமான தேசியக் கட்சியான பா.ஜ.,வை, ௨௦௨௪ லோக்சபா தேர்தலில் வீழ்த்த வேண்டும் என்பதற்காக, இந்த முயற்சியை எடுத்துள்ளார். அவரது பிரதமர் பதவி கனவும், ஒரு துாண்டுகோல்.
ஜனாதிபதி தேர்தலின் போதும், இப்படித் தான் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட சிலர் குதித்தனர்; பா.ஜ.,வை வீழ்த்தி விட வேண்டும் என்று, வீர வசனம் பேசினர். ஆனால், அவர்களால் ஜனாதிபதி தேர்தலில் களமிறங்க, சரியான ஒரு வேட்பாளரை கூட தேர்வு செய்ய முடியவில்லை. கடைசியில், பா.ஜ., அதிருப்தியாளரான, முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்கா தான், இவர்களின் பேச்சை கேட்டு களத்தில் இறங்கி அசிங்கப்பட்டார். பா.ஜ.,வுக்கு போட்டியாக உருவாகும் பலமான எதிரணியில், காங்கிரஸ், கம்யூனிஸ்ட்கள் இடம் பெறக்கூடாது என்கிறார், மம்தா. ஆனால், நிதிஷ்குமாரோ, இந்த இரு கட்சிகளும் இடம் பெற்றால் தான், கூட்டணி பலம் பெறும் என்று அடம் பிடிக்கிறார். ஆரம்பத்திலேயே இப்படி முரண்பாடு உள்ளது. இவர்கள் எப்படி பலமான கூட்டணி அமைப்பர்?
பிரதமர் மோடியின் எட்டு ஆண்டு ஆட்சியில், மத்திய அரசில் ஊழல் இல்லை. இந்தியா வளர்ச்சிப் பாதையில் வெற்றி நடை போடுகிறது. பாமர மக்களும், கிராமப்புற மக்களும் விழிப்புணர்வு அடைந்து, பா.ஜ.,வை அமோகமாக ஆதரிக்கத் துவங்கி உள்ளனர்.இப்படிப்பட்ட சூழ்நிலையில், நவக்கிரகங்கள் போல ஆளுக்கொரு பக்கம் இழுக்கும், முரண்பட்ட கொள்கைகளை பின்பற்றும், அரசியல் தலைவர்களை ஒன்றிணைத்து, பா.ஜ.,வுக்கு சவால் விடும் வகையிலான போட்டி அணியை உருவாக்குவது என்ற, நிதிஷ்குமாரின் கனவு பகல் கனவாகவே அமையும். அவரின் முயற்சி வீண் முயற்சியாகி விடும்
என்பதில் சந்தேகமில்லை.


திருந்த வேண்டியதுநாம் தான்!வ.ப.நாராயணன், ஊரப்பாக்கம், செங்கல்பட்டு மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: ஜெயலலிதா தலைமையிலான, அ.தி.மு.க., ஆட்சியில், போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, வேலை வாங்கித் தருவதாகக் கூறி, பலரிடம் பணம் வாங்கி மோசடி செய்ததாக வழக்கு தொடரபட்டது.ஆனால், வாங்கிய பணத்தை பாதிக்கப்பட்டோருக்கு திருப்பிக் கொடுத்து சமரசம் செய்து விட்டதால், வழக்கிலிருந்து அமைச்சரை விடுதலை செய்ய வேண்டும் என்று, அவரின் உதவியாளர் தாக்கல் செய்த மனுவை ஏற்று, சமீபத்தில் சென்னை உயர் நீதிமன்றம், செந்தில் பாலாஜி மீதான மோசடி வழக்கை ரத்து செய்து தீர்ப்பளித்தது.இருந்தும், மேல்முறையீட்டுக்கு சென்ற இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், 'சமரசம் செய்து விட்டதால், மோசடி செய்தது இல்லை என்றாகி விடாது' எனக் கூறி, உயர் நீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்து, வழக்கை மறு விசாரணை செய்ய உத்தரவிட்டுள்ளனர். இதிலிருந்தே, பண மோசடியில் செந்தில் பாலாஜி ஈடுபட்டது உண்மை என்பது வெட்ட வெளிச்சமாகி விட்டது. அமைச்சர் பண மோசடி செய்தது உண்மை என்பது, அவரது உதவியாளரின் திருவாயிலிருந்தே வெளிவந்து விட்டது. இதே செந்தில் பாலாஜி மீது, அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஸ்டாலின், கரூர் பொதுக் கூட்டத்தில், அடுக்கடுக்கான ஊழல் புகார்களை பட்டியலிட்டு, படித்தும் காட்டினார்; செந்தில் பாலாஜியும், அவரது தம்பி யும், கரூரில் தாதாவாக கோலோச்சுவதாகவும் கூறினார். அதற்கான, 'வீடியோ' ஆதாரமும் உள்ளது.இப்போது, நாம் எழுப்பும் கேள்வி, யார் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை, ஸ்டாலின் முன் வைத்தாரோ, அவரையே அமைச்சர் பதவியில் அமர்த்தியது ஏன்... வேறு யாராவது, செந்தில் பாலாஜி மீது ஊழல் புகார்களை கூறியிருந்தால், அவை பொய் என்று முதல்வர் சொல்லி விடலாம். ஆனால், முதல்வரே கூறி விட்டு, அவரை அமைச்சரவையில் சேர்த்து உள்ளார்.எனவே, செந்தில் பாலாஜி மீது, தான் சுமத்திய புகார் அனைத்தும் தவறு என்றும், கறை படியாத கரங்களுக்குச் சொந்தக்காரர், உத்தமர் என்றும், முதல்வர் நற்சான்றிதழ் தர வேண்டும். அதை விடுத்து, ஊழல் அமைச்சர்களை வைத்து, ஸ்டாலினால் எப்படி நல்லாட்சியையும்,
விடியலையும் தர முடியும்? வாக்காளர்களாகிய நாமும், காசுக்கு ஆசைப்பட்டு ஊழல்வாதிகளுக்கே திரும்பத் திரும்ப ஓட்டளித்து வெற்றி பெறச் செய்தால், மாநிலத்தின் வளர்ச்சியை பற்றி கனவிலும் நினைக்க முடியாது. மாறாக, ஊழல்வாதிகளை வளர்த்து விட்டு, நாம் கையேந்தும் ஏழைகளாகவே இருப்போம்.
எனவே, திருந்த வேண்டியது மக்களாகியநாம் தானே தவிர, அரசியல்வாதிகள் அல்ல!


கோடீஸ்வரர்கள்முன்வருவரா?ஜெ.மனோகரன், மதுரையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழக அரசு வாங்கிய கடனை அடைக்க, சவுதி அரேபி யாவில் வசிக்கும் பொறியாளர் சின்னராஜா செல்லத்துரை, தன் பங்காக, ௯௦ ஆயிரத்து ௫௫௮ ரூபாயை முதல்வர் நிவாரண நிதிக்கு அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இவர் திருச்சி மாவட்டம், துறையூர் தாலுகா, கொப்பம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர். வளைகுடா நாட்டில் வேலை செய்து, சேமித்த பணத்திலிருந்து இதை அனுப்பியுள்ளார். தமிழக அரசின் கடன் சுமையை குறைக்க வேண்டும் என்ற நல்மனதோடு, தன் பங்களிப்பை வழங்கியுள்ளார்; அவருக்கு, தமிழக மக்களின் சார்பில் நன்றி கலந்த பாராட்டு.
சின்னராஜா செல்லத்துரையின் இச்செயல், அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது மட்டுமின்றி, அனைவருக்கும் முன் உதாரணமாகவும், அவர் தன்னை அடையாளம் காட்டியுள்ளார். இந்தியாவின் கடன் சுமை, 100 லட்சம் கோடி ரூபாயை தாண்டி விட்டது. இந்நிலையில், நம் நாட்டில் உள்ள பெரும் கோடீஸ்வரர்களும், அரசியல்வாதிகளும், சின்னராஜா போல, கடனை அடைக்க உதவ வேண்டும்.
அதேபோல, தமிழக அரசின் கடன் சுமையான, 7 லட்சம் கோடி ரூபாயை தீர்க்கவும், இங்குள்ள திரைத் துறையினர், அரசியல்வாதிகள் மற்றும் கோடீஸ்வரர்கள் உள்ளிட்ட அனைவரும் உடனடியாக முன்வர வேண்டும்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
chennai sivakumar - chennai,இந்தியா
16-செப்-202209:54:41 IST Report Abuse
chennai sivakumar Today the central govt has approved the pen statue proposal by our state government. Is it a useful expenditure or do we have surplus funds? My request is before making an appeal please think twice. Thanks
Rate this:
Cancel
chennai sivakumar - chennai,இந்தியா
16-செப்-202209:47:37 IST Report Abuse
chennai sivakumar அடுத்தவன் வீட்டு நெய்யே என் அண்ணன் பொண்டாட்டி கையே கதை போல இருக்கிறது கோடீஸ்வரர்களை நாட்டு கடனை செலுத்த சொல்லுவது. மதி இன்மையால் அரசியல் வாதிகள் செய்யும்.தவறுக்கு கோடீஸ்வரர்களை எப்படி பலிகடா ஆக்க முடியும்??
Rate this:
Cancel
Dharmavaan - Chennai,இந்தியா
16-செப்-202206:57:17 IST Report Abuse
Dharmavaan ஏன் யாருமே அரசு செலவை குறைக்க வேண்டும் என்று சொல்லவில்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X