கலெக்டர் உத்தரவு: டாஸ்மாக் அலட்சியம் மதுக்கடைகளால் தீராத பிரச்னைகள்| Dinamalar

கலெக்டர் உத்தரவு: 'டாஸ்மாக்' அலட்சியம் மதுக்கடைகளால் தீராத பிரச்னைகள்

Added : செப் 15, 2022 | |
தமிழகத்தில், தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலையோரத்தில் இயங்கும் 'டாஸ்மாக்' கடைகளை மூட வேண்டும் என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.எனினும், சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை, செங்கல்பட்டு ஜி.எஸ்.டி., சாலையையொட்டி இரண்டு டாஸ்மாக் கடைகள் செயல்படுகின்றன. புதிய பேருந்து நிலையம், தனியார் ஓட்டல் முதல் ராட்டினங்கிணறு வரை, ஐந்து டாஸ்மாக் கடைகள் இயங்குகின்றன. இந்த கடைகள்
கலெக்டர் உத்தரவு: 'டாஸ்மாக்' அலட்சியம் மதுக்கடைகளால் தீராத பிரச்னைகள்

தமிழகத்தில், தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலையோரத்தில் இயங்கும் 'டாஸ்மாக்' கடைகளை மூட வேண்டும் என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

எனினும், சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை, செங்கல்பட்டு ஜி.எஸ்.டி., சாலையையொட்டி இரண்டு டாஸ்மாக் கடைகள் செயல்படுகின்றன. புதிய பேருந்து நிலையம், தனியார் ஓட்டல் முதல் ராட்டினங்கிணறு வரை, ஐந்து டாஸ்மாக் கடைகள் இயங்குகின்றன. இந்த கடைகள் செயல்படும் இடங்களில் குடியிருப்புகள், அரசு கலை கல்லுாரி, பள்ளிகள், மருத்துவமனைகள் ஆகியவை உள்ளன.

மாலை 6:30 மணி முதல் இரவு 8:00 மணி வரை, ஜி.எஸ்.டி., சாலையில் செயல்படும் டாஸ்மாக் கடைகளுக்கு 'குடி'மகன்கள் அதிகமாக வருவதால், அவர்களின் வாகனங்கள் சாலையிலேயே நிறுத்தப்பட்டு, கடும் போக்கு வரத்து நெரிசல் ஏற்படுகிறது.அவர்கள், சாலையை 'குடி'மையமாக பயன்படுத்துவதால், அவ்வழியாக செல்லும் பெண்கள், மாணவர்கள், முதியோருக்கு பாதிப்பு ஏற்படுகிறது.'குடி'மகன்களால் அடிக்கடி தகராறு நடக்கிறது; சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படுகிறது.

இந்த கடைகளை இடமாற்றம் செய்யக்கோரி, முதல்வர் மற்றும் கலெக்டர் ஆகியோரிடம், பகுதி மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.இதனால், 'ஜி.எஸ்.டி., சாலை டாஸ்மாக் கடைகளை இடம் மாற்றம் செய்ய வேண்டும்' என, டாஸ்மாக் மேலாளருக்கு, கலெக்டர் ராகுல்நாத், ஆறு மாதங்களுக்கு முன் உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை, டாஸ்மாக் நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை. கடந்த மாதம் நடந்த, சட்டம் - ஒழுங்கு தொடர்பான கூட்டத்திலும், டாஸ்மாக் கடைகளை மாற்ற வேண்டும் என, கலெக்டர் உத்தரவிட்டார். அப்போதும் நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை. தொடர்ந்து செயல்படும் கடைகளால், விபத்து, அடிதடி, நெரிசல் உள்ளிட்ட பிரச்னை தீராமல் தொடர்கிறது.

சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:செங்கல்பட்டு நகரில், ஜி.எஸ்.டி., சாலையையொட்டி, டாஸ்மாக் கடைகள் செயல்படுகின்றன. இங்கு வரும் 'குடி'மகன்கள், மது குடித்த போதையில், அடிக்கடி தகராறில் ஈடுபடுகின்றனர். கடைகள், 24 மணி நேரமும் இயங்குகின்றன. 'குடி'மகன்களின் வாகனங்களால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதை தவிர்க்க, டாஸ்மாக் கடைகளை இடம் மாற்ற, மாவட்ட நிர்வாகம் மற்றும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X