சிறப்பு பகுதிகள்

டீ கடை பெஞ்ச்

ஒன்றிய செயலர் பதவியின் விலை ரூ.1 கோடி!

Added : செப் 15, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
ஒன்றிய செயலர் பதவியின் விலை ரூ.1 கோடி!''கனிம வளங்கள் கொள்ளை போறது ஓய்...'' என்றபடியே, பெஞ்சில் அமர்ந்தார் குப்பண்ணா.''எந்த ஊருல வே...'' எனக் கேட்டார், அண்ணாச்சி.''கோவை மாவட்டம், பொள்ளாச்சி, ஆனைமலை, கிணத்துக்கடவு தாலுகாக்கள்ல இருக்கற கேரள எல்லை சோதனை சாவடிகள்ல, ஆயுதப்படை போலீசார் பணியில இருக்கா... தமிழகத்துல இருந்து மணல், மண் மாதிரியான கனிம வளங்களை

டீ கடை பெஞ்ச்


ஒன்றிய செயலர் பதவியின் விலை ரூ.1 கோடி!



''கனிம வளங்கள் கொள்ளை போறது ஓய்...'' என்றபடியே, பெஞ்சில் அமர்ந்தார் குப்பண்ணா.

''எந்த ஊருல வே...'' எனக் கேட்டார், அண்ணாச்சி.

''கோவை மாவட்டம், பொள்ளாச்சி, ஆனைமலை, கிணத்துக்கடவு தாலுகாக்கள்ல இருக்கற கேரள எல்லை சோதனை சாவடிகள்ல, ஆயுதப்படை போலீசார் பணியில இருக்கா... தமிழகத்துல இருந்து மணல், மண் மாதிரியான கனிம வளங்களை கடத்திண்டு போற லாரிகள், ஒரு சோதனை சாவடிக்கு தலா 100 ரூபாயை அழுத்திட்டு, தினமும் மூணு டிரிப்கள் அடிக்கறது ஓய்...

''அதே மாதிரி, ரேஷன் அரிசி கடத்தலையும் இவா கண்டுக்கறது இல்லை... ஆயுதப்படை போலீசார், 'செழிப்பா' இருக்கறதால, மற்ற எந்த டூட்டிக்கும் போக மாட்டேங்கறா ஓய்...

''இதனால, ஆயுதப்படை போலீசார் பாதுகாப்புக்கு போக வேண்டிய நிகழ்ச்சிகளுக்கும், உள்ளூர் போலீசாரே போறா... அவாளோ, 'வருமானம் அவங்களுக்கு... பணிச்சுமை மட்டும் எங்களுக்கா'ன்னு
புலம்பிண்டு இருக்கா ஓய்...'' என்றார், குப்பண்ணா.

''கைமாத்து வாங்கிட்டு, கடுக்கா குடுத்துடுதாரு வே...'' என, அடுத்த தகவலுக்கு தடம் மாறினார், அண்ணாச்சி.

''யாருங்க அந்த கில்லாடி...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.

''திருவள்ளூர் மாவட்டத்துல பிரபலமான முருகன் கோவில்ல ஒரு அதிகாரி இருக்காரு... இவர், தனக்கு கீழ வேலை பார்க்கிற ஊழியர்களிடம், 'குடும்பத்துல இருக்கிறவங்களுக்கு உடம்பு சரியில்லை... ஆஸ்பிட்டல் போகணும்'னு சொல்லி, 1,000த்துல இருந்து, 50 ஆயிரம் ரூபாய் வரைக்கும் கடன் மாதிரி கேட்டு வாங்குதாரு வே...

''புதுசா வேலைக்கு சேர்ந்தவங்களிடம், 'உனக்கு புரமோஷன் வாங்கி தர்றேன்... உம் மேல நிறைய புகார் வருது... அதுல இருந்து காப்பாத்தணும்னா, 25 ஆயிரம் குடு, 50 ஆயிரம் குடு'ன்னு கறந்துடுதாரு... இப்படியே, இங்க வந்த ஆறு மாசத்துல, பல லட்சம் ரூபாய் சம்பாதிச்சிட்டாருன்னா பாருங்க வே...'' என்றார், அண்ணாச்சி.ஒலித்த மொபைல் போனை எடுத்த அந்தோணிசாமி,

''சொல்லுங்க அய்யம்பிள்ளை...'' என, தள்ளிச் சென்று பேச ஆரம்பித்தார்.உடனே, ''திருவள்ளூர் மாவட்ட தி.மு.க., தேர்தல்ல, 20க்கும் மேற்பட்ட ஒன்றியம், பேரூராட்சி, நகராட்சி செயலர் பதவிகளுக்கு பழைய ஆட்களையே அறிவிச்சிட்டாங்க... ஆனா, புழல் ஒன்றியத்துக்கு மட்டும் ரியல் எஸ்டேட் அதிபர் ஒருத்தரை தேர்வு பண்ணிட்டாங்க பா...'' என கடைசி தகவலுக்கு வந்த அன்வர்பாயே தொடர்ந்தார்...

''பழைய ஒன்றிய செயலருக்கு மாவட்ட பிரதிநிதின்னு டம்மி பதவியை குடுத்திருக்காங்க பா...

''ரியல் எஸ்டேட் அதிபர் 1 கோடி ரூபாய் வெட்டியிருக்கார்... அதை, மாவட்டமும், எம்.பி.,யும் பங்கு பிரிச்சுக்கிட்டாங்களாம்... 'மாவட்ட புள்ளியை மாத்த, எம்.எல்.ஏ., ஒருத்தர் முன்னாடி கையெழுத்து இயக்கம் நடத்தினார்... அதுல கையெழுத்து போட்ட ஒன்றியச் செயலரை, நேரம் பார்த்து மாவட்ட புள்ளி பழிவாங்கிட்டார்'னு கட்சிக்காரங்க பேசிக்கிறாங்க பா...'' என முடித்தார், அன்வர்பாய்.''சுதர்சனமும், ராஜாவும் பைக்குல எங்க வேகமா போறான்னு தெரியலையே...'' என, முணுமுணுத்தபடியே குப்பண்ணா நடக்க, மற்றவர்களும் கிளம்பினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
16-செப்-202207:17:13 IST Report Abuse
NicoleThomson ஒட்டு மொத்த இந்தியாவை ஒன்றியம் என்று கூறிவிட்டதால் இனி ஊராட்சி ஒன்றியத்தை ஊராட்சி மத்தியம் என்று அழைக்கிறோம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X