கடத்தலில் ஈடுபடுவோரை கைது செய்ய கட்டுப்பாடு

Added : செப் 15, 2022 | |
Advertisement
சென்னை:'விமானத்தில் பயணியர் கடத்தி வரும் பொருட்களின் மதிப்பு, 50 லட்சம் ரூபாய்க்கு மேல் இருந்தால் மட்டுமே, கைது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்' என, மத்திய மறைமுக வரி விதிப்பு வாரியம் அறிவித்துள்ளது.விமானத்தில் வரும் பயணியர், வெளிநாடுகளில் இருந்து எடுத்து வரும் பொருட்களை, அதற்குரிய விண்ணப்பத்தில் தெரிவிக்க வேண்டும். தங்கம் போன்ற விலை உயர்ந்த பொருட்களுக்கு சுங்க வரி

சென்னை:'விமானத்தில் பயணியர் கடத்தி வரும் பொருட்களின் மதிப்பு, 50 லட்சம் ரூபாய்க்கு மேல் இருந்தால் மட்டுமே, கைது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்' என, மத்திய மறைமுக வரி விதிப்பு வாரியம் அறிவித்துள்ளது.

விமானத்தில் வரும் பயணியர், வெளிநாடுகளில் இருந்து எடுத்து வரும் பொருட்களை, அதற்குரிய விண்ணப்பத்தில் தெரிவிக்க வேண்டும். தங்கம் போன்ற விலை உயர்ந்த பொருட்களுக்கு சுங்க வரி செலுத்தி எடுத்து வரலாம். சுங்க வரி செலுத்தாமல், உடைமைகள், உடலுக்குள் மறைத்து எடுத்து வரும் பொருட்கள், கடத்தலாக கருதப்படும்.

இப்பொருட்களின் மதிப்பு, 20 லட்சம் ரூபாய் மற்றும் அதற்கு மேல் இருந்தால், கைது செய்யப் பட்டு ஜாமினில் விடுவிக்கப்படுவர். உண்மையை மறைத்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் மதிப்பு, 1 கோடி ரூபாய் அல்லது அதற்கு மேல் இருந்தால், அந்த நபர் கைது செய்யப்பட்டு, ஜாமினில் விடுவிக்கப்படுவார்.

இந்த நிலையில், கைது நடவடிக்கை மேற்கொள்வதற்கான கடத்தல் பொருட்களின் மதிப்பை 20 லட்சம் ரூபாயில் இருந்து, 50 லட்சம் ரூபாயாகவும், இறக்குமதி செய்யும் பொருட்களின் மதிப்பை, 2 கோடி ரூபாயாகவும், மத்திய மறைமுக வரி வாரியம் உயர்த்தி உள்ளது.

இதுகுறித்து, மத்திய மறைமுக வரி வாரியத்தின், சுங்கப் பிரிவு இணை கமிஷனர் சுற்றறிக்கை: அனுமதி இல்லாமல் எடுத்து வரும் பொருட்களின் மதிப்பு, சந்தை மதிப்பில் 50 லட்சம் ரூபாய் மற்றும் அதற்கு மேல் இருந்தால் மட்டுமே, சம்பந்தப்பட்ட நபரை கைது செய்ய வேண்டும்.

இதேபோல, சரக்குகளின் விபரத்தை தவறாக குறிப்பிடுதல், ஏமாற்றுதல், அனுமதி இல்லாமல் இறக்குமதி செய்தல், உண்மையை மறைத்தல் ஆகியவற்றின் வாயிலாக கைப்பற்றப்படும் சரக்குகளின் மதிப்பு, 2 கோடி ரூபாயாக இருந்தால் மட்டுமே கைது செய்ய வேண்டும்.இது, கள்ள நோட்டுகள், ஆயுதங்கள், பழங்கால பொருட்கள், வன விலங்குகள், தடை செய்யப்பட்ட பொருட்கள் போன்றவற்றுக்கு பொருந்தாது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X