'ெஹர்னியா பிரச்னைக்கு இதோ இருக்கிறது தீர்வு!'

Added : செப் 15, 2022 | |
Advertisement
''ெஹர்னியா எனப்படும் குடலிறக்கம் பிரச்னையை, அறுவை சிகிச்சை மூலம் மட்டுமே குணப்படுத்த முடியும்,'' என்கிறார், கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனை லேப்ராஸ்கோபி மற்றும் உடல் எடை குறைப்பு அறுவை சிகிச்சை நிபுணர் ராஜ்குமார்.மேலும் அவர் கூறியதாவது:வயிறு, தொடை இடுக்குகளில், கைகளால் உணர முடிகிற அளவுக்கு வீக்கம் இருந்தால், உடனடியாக மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்ய
'ெஹர்னியா பிரச்னைக்கு இதோ இருக்கிறது தீர்வு!'

''ெஹர்னியா எனப்படும் குடலிறக்கம் பிரச்னையை, அறுவை சிகிச்சை மூலம் மட்டுமே குணப்படுத்த முடியும்,'' என்கிறார், கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனை லேப்ராஸ்கோபி மற்றும் உடல் எடை குறைப்பு அறுவை சிகிச்சை நிபுணர் ராஜ்குமார்.

மேலும் அவர் கூறியதாவது:வயிறு, தொடை இடுக்குகளில், கைகளால் உணர முடிகிற அளவுக்கு வீக்கம் இருந்தால், உடனடியாக மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்ய வேண்டும். ஏனெனில், இது ஹெர்னியா எனப்படும் குடலிறக்கமாக இருக்கலாம்.வயிற்றில் உள்ள உறுப்புகள் அனைத்தும் மிக நெருக்கமாக ஒன்றுடன் ஒன்று இணைந்துள்ளன. இவற்றை வயிற்றின் உட்புற தசைச்சுவர், இறுக்கமாக பிடித்து வைத்திருப்பதால் தான் அனைத்து உறுப்புகளும் அதனதன் இடங்களில் உள்ளன. இந்த தசைச்சுவர் பலவீனம் அடைந்தாலோ அல்லது ஏதாவது காரணங்களால் விரிசல் விழுந்தாலோ, குடலிறக்கம் ஏற்படுகிறது.வயிற்றின் மேல் பகுதி, தொப்புள், தொடையிடுக்கு ஆகிய இடங்களில் வீக்கமாக இருந்தால், அது ெஹர்னியாவாக இருக்கலாம். பெண்களை விட, ஆண்களுக்கே ெஹர்னியா பாதிப்பு அதிகம் ஏற்படுகிறது. 40 முதல் 60 வயது வரையுள்ள ஆண்களே, அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.அதிக எடை துாக்கும் பணியில் உள்ளோர், மலச்சிக்கல் உள்ளோர், உடல் பருமனாக இருப்போர், தசை பலவீனம் உள்ளவர்கள், நீண்ட நாள் இருமல் பிரச்னை உள்ளவர்கள் மற்றும் வயிற்றில் அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களுக்கு, இப்பாதிப்பு ஏற்படுகிறது.வீக்கம் மற்றும் வலி பொதுவான அறிகுறிகள். குடலிறக்கத்தை ஆரம்பத்திலேயே கண்டறிந்தால், லேப்ராஸ்கோபி அறுவை சிகிச்சை மூலம் சரி செய்து விடலாம். இந்த அறுவை சிகிச்சை செய்து கொள்பவர்கள், ஒருநாள் மட்டும் மருத்துவமனையில் தங்கினால் போதும். சிகிச்சைக்குப்பின் ஓரிரு நாளில் இயல்பு நிலைக்கு திரும்பி விடலாம்.குடலிறக்கம் பெரிதாகி விட்டால், அறுவை சிகிச்சைதான் மேற்கொள்ள வேண்டும்.கே.எம்.சி.எச்.,ல் அனைத்து வகையான ெஹர்னியா பாதிப்புகளுக்கும், சிகிச்சை அளிக்க வசதிகள் உள்ளன.மேலும் விவரங்களுக்கு, 73393 33485 என்ற மொபைல் போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு, அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X