சாலையோரம் மாட்டுச்சாணம் குவியல் துர்நாற்றத்தால் வாகன ஓட்டிகள் அவதி| Dinamalar

சாலையோரம் மாட்டுச்சாணம் குவியல் துர்நாற்றத்தால் வாகன ஓட்டிகள் அவதி

Added : செப் 15, 2022 | |
மப்பேடு:மப்பேடு அருகே, நெடுஞ்சாலையோரம் மாட்டுச் சாணத்தை கொட்டுவதால் ஏற்படும் துர்நாற்றத்தால், பயணியர் மற்றும் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.கடம்பத்துார் ஒன்றியம், மப்பேடு ஊராட்சியில், விவசாயம் மற்றும் மாடுகள் வளர்ப்பது, பால் சார்ந்த தொழில்கள் அதிகளவில் நடந்து வருகின்றன.இதனால், மாடுகளிலிருந்து வெளியேறும் சாணத்தை கொட்டுவதற்கு, ஊராட்சியில் இடமில்லாததால்,
சாலையோரம் மாட்டுச்சாணம் குவியல் துர்நாற்றத்தால் வாகன ஓட்டிகள் அவதி

மப்பேடு:மப்பேடு அருகே, நெடுஞ்சாலையோரம் மாட்டுச் சாணத்தை கொட்டுவதால் ஏற்படும் துர்நாற்றத்தால், பயணியர் மற்றும் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.

கடம்பத்துார் ஒன்றியம், மப்பேடு ஊராட்சியில், விவசாயம் மற்றும் மாடுகள் வளர்ப்பது, பால் சார்ந்த தொழில்கள் அதிகளவில் நடந்து வருகின்றன.இதனால், மாடுகளிலிருந்து வெளியேறும் சாணத்தை கொட்டுவதற்கு, ஊராட்சியில் இடமில்லாததால், மப்பேடு -- தண்டலம் நெடுஞ்சாலையோரம் குடியிருப்பு பகுதிகள் நிறைந்த பகுதியில் மாட்டுச் சாணத்தை கொட்டி வருகின்றனர்.


இதனால் ஏற்படும் துர்நாற்றத்தில் இந்த நெடுஞ்சாலை வழியே வாகனங்களில் செல்வோர் அவதிப்பட்டு வருகின்றனர்.மேலும், சில நேரங்களில் குவித்து வைக்கப்பட்டுள்ள மாட்டு சாணம், பகுதிவாசிகள் தீ வைத்து எரிப்பதால், ஏற்படும் புகையால் வாகன ஓட்டிகள் மற்றும் பயணியருக்கு கண் எரிச்சல் ஏற்படுகிறது.எனவே, நெடுஞ்சாலையோரம் மாட்டுச் சாணம் கொட்டுவதை தடுக்க, தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணியர், வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X