ஐ.சி.யூ.,வில் 2 நோயாளிகள் மரணம்: மின் பிரச்னை காரணம் என குற்றச்சாட்டு

Added : செப் 15, 2022 | |
Advertisement
பல்லாரி-பல்லாரி விம்ஸ் மருத்துவமனை ஐ.சி.யூ.,வில் இருந்த இரண்டு நோயாளிகள், நேற்று முன்தினம் இறந்தனர். மின்சாரம் துண்டிக்கப்பட்டு ஆக்சிஜன் வினியோகம் நின்றதால், இறந்து விட்டதாக, உறவினர்கள் குற்றஞ்சாட்டினர்.பல்லாரியில் உள்ள விம்ஸ் மருத்துவமனையில், சிட்டம்மா என்ற பெண்மணி பாம்பு கடித்தும், மவுலானா என்பவர், மூளை மற்றும் சிறுநீரகம் பிரச்னைக்கு, ஐ.சி.யூ.,வில் சிகிச்சை பெற்று

பல்லாரி-பல்லாரி விம்ஸ் மருத்துவமனை ஐ.சி.யூ.,வில் இருந்த இரண்டு நோயாளிகள், நேற்று முன்தினம் இறந்தனர். மின்சாரம் துண்டிக்கப்பட்டு ஆக்சிஜன் வினியோகம் நின்றதால், இறந்து விட்டதாக, உறவினர்கள் குற்றஞ்சாட்டினர்.

பல்லாரியில் உள்ள விம்ஸ் மருத்துவமனையில், சிட்டம்மா என்ற பெண்மணி பாம்பு கடித்தும், மவுலானா என்பவர், மூளை மற்றும் சிறுநீரகம் பிரச்னைக்கு, ஐ.சி.யூ.,வில் சிகிச்சை பெற்று வந்தனர். நேற்று முன்தினம், இருவரும் உயிரிழந்தனர்.மருத்துவமனையில் இரண்டு நாட்களாக, மின் சப்ளையில் பாதிப்பு இருந்தது. இதனால், ஆக்சிஜன் வினியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டது. இதுவே நோயாளிகளின் இறப்புக்கு காரணமாக இருக்கலாம் என, உறவினர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். ஆனால் இதை மருத்துவமனை அதிகாரிகள் மறுத்துள்ளனர். அவர்கள் கூறுகையில், 'விம்ஸ் மருத்துவமனையில் மின் பிரச்னை ஏற்பட்டது உண்மைதான். அதை உடனடியாக சரி செய்தோம். 'பழைய மின் கேபிள்களை மாற்றாத காரணத்தால், அவ்வப்போது பிரச்னை ஏற்படுகிறது. கேபிள்களை மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். 'மின் பற்றாக்குறையால் நோயாளிகள் இறந்ததாக கூறப்படுவது பொய். நோய் தீவிரமடைந்து இருவரும் இறந்தனர்' என்றனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X