கடற்கரையை சுத்தம் செய்த மாநகராட்சி பள்ளி மாணவர்கள்| Dinamalar

கடற்கரையை சுத்தம் செய்த மாநகராட்சி பள்ளி மாணவர்கள்

Added : செப் 15, 2022 | |
திருவொற்றியூர், :உலக கடற்கரை தினத்தையொட்டி, தாழங்குப்பம் கடற்கரையில் மாநகராட்சி பள்ளி மாணவர்கள் துாய்மைப் பணியில் ஈடுபட்டனர். அங்கு, 100 கிலோ குப்பையை சேகரித்து, துாய்மை பணியாளர்களிடம் வழங்கினர். சென்னை, எண்ணுார், நெட்டுக்குப்பம், மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில், 200 க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் படிக்கின்றனர். உலக கடற்கரை தினத்தையொட்டி, நேற்று காலை பள்ளி மாணவர்கள்
கடற்கரையை சுத்தம் செய்த மாநகராட்சி பள்ளி மாணவர்கள்

திருவொற்றியூர், :உலக கடற்கரை தினத்தையொட்டி, தாழங்குப்பம் கடற்கரையில் மாநகராட்சி பள்ளி மாணவர்கள் துாய்மைப் பணியில் ஈடுபட்டனர். அங்கு, 100 கிலோ குப்பையை சேகரித்து, துாய்மை பணியாளர்களிடம் வழங்கினர். சென்னை, எண்ணுார், நெட்டுக்குப்பம், மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில், 200 க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் படிக்கின்றனர். உலக கடற்கரை தினத்தையொட்டி, நேற்று காலை பள்ளி மாணவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.பள்ளி தலைமை ஆசிரியர் லெஸ்லி தலைமையில், 50க்கும் மேற்பட்ட மாணவர்கள், விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தி, பள்ளியில் இருந்து ஊர்வலமாக தாழங்குப்பம் கடற்கரைக்கு வந்தனர். தலையில் தொப்பி, கையுறை, முக கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களுடன், தாழங்குப்பம் கடற்கரையில் குவிந்து கிடந்த குப்பையை, மக்கும், மக்கா மற்றும் அபாயகரமான குப்பை என, தரம் பிரித்து சேகரித்தனர்.ஆறு சாக்கு மூட்டைகளில், 100 கிலோவுக்கும் அதிகமான குப்பை சேகரிக்கப்பட்டு, துாய்மை பணியாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மாணவர்களின், இந்த விழிப்புணர்வு செயலை, பலரும் வெகுவாக பாராட்டினர்.இந்நிகழ்ச்சியில், பள்ளி ஆசிரியர் கெனாசின், துாய்மை பணி அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

சிலர் செய்யும் தவறால், கடற்கரை படுமோசமாகி விடுகிறது. அனைவரும் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும். நாம் வீசி செல்லும் குப்பை, கடலில் கலந்து அவற்றை உண்ணும் மீனும், மீனை சாப்பிடும் நாமும் கடுமையாக பாதிக்கிறோம். இனியொரு முறை, இந்த தவறை செய்யக் கூடாது. முடிந்தவரை, கடற்கரையில் குப்பை போடுவதை தவிர்க்க வேண்டும். துாய்மை பணியாளர்களிடம் குப்பை வழங்கும் போது, தரம் பிரித்து வழங்க வேண்டும்.- வி.அனிஷா, 8 ம் வகுப்பு, மாநகராட்சி நடுநிலைப் பள்ளி, நெட்டுக்குப்பம், எண்ணுார்.

தவறு செய்யாதீர்



புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X