இணைப்பு சாலை சந்திப்புகளில்வடிகால் பள்ளங்களால் விபத்து

Added : செப் 15, 2022 | |
Advertisement
அம்பத்துார் :இணைப்பு சாலை சந்திப்புகளில் முடிக்கப்படாத மழை நீர் வடிகால் பணிகளால் ஆட்டோ, இரு சக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி பாதிக்கப்படுகின்றனர்.சென்னை அம்பத்துார் மண்டலம், 80வது வார்டு, விஜயலட்சுமி புரம், அம்பேத்கர் தெரு உள்ளிட்ட பல தெருக்களின் இணைப்பு சாலை சந்திப்புகளில், மழை நீர் வடிகால் முழுமையாக முடியவில்லை. அதனால், இரவு நேரத்தில் அந்த சாலை சந்திப்புகளை
இணைப்பு சாலை சந்திப்புகளில்வடிகால் பள்ளங்களால் விபத்து

அம்பத்துார் :இணைப்பு சாலை சந்திப்புகளில் முடிக்கப்படாத மழை நீர் வடிகால் பணிகளால் ஆட்டோ, இரு சக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி பாதிக்கப்படுகின்றனர்.சென்னை அம்பத்துார் மண்டலம், 80வது வார்டு, விஜயலட்சுமி புரம், அம்பேத்கர் தெரு உள்ளிட்ட பல தெருக்களின் இணைப்பு சாலை சந்திப்புகளில், மழை நீர் வடிகால் முழுமையாக முடியவில்லை. அதனால், இரவு நேரத்தில் அந்த சாலை சந்திப்புகளை கடந்து செல்லும் ஆட்டோ, இரு சக்கர வாகன ஓட்டிகள், பள்ளத்தில் விழுந்து, விபத்தில் சிக்கி பாதிக்கப்படுகின்றனர்.இது தவிர, சிறுவர் மற்றும் மாடு, நாய் உள்ளிட்ட கால்நடைகளும், அதில் தவறி விழுவது அதிகரித்துள்ளது.

அரைகுறையான மழை நீர் வடிகால் இணைப்புகளில், கூர்மையான, துருப்பிடித்த இரும்பு கம்பிகளால், பள்ளத்தில் விழுவோர் பலத்த காயமடைகின்றனர். கடந்த, நான்கைந்து மாதங்களாக இந்த பிரச்னை நீடிப்பதாக, பொதுமக்கள் குற்றஞ் சாட்டுகின்றனர்.இது குறித்து, மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் செய்தால், குறிப்பிட்ட சில இடங்களில் மட்டும், கழிவு மண்ணைக் கொட்டி, தற்காலிகமாக மூடி வைக்கின்றனர்.கன மழை பெய்தால், மழை நீருடன் கழிவு நீர் கலந்து தேங்கி, அங்கு கொட்டிய மண் கரைந்து போகிறது.

அதனால், மேலும் மோசமான நிலை ஏற்படுகிறது. தொடர் மழைக்காலம் துவங்கி விட்டால் பள்ளங்கள், ஆபத்தான இரும்பு கம்பிகள், மின் இணைப்புகளால் உயிர்பலி ஏற்படும் ஆபத்து உள்ளது. எனவே, அம்பத்துார் மண்டலத்தின் அனைத்து பகுதியிலும், அரை குறையாக விடப்பட்ட மழை நீர் வடிகால் பணிகளை, உரிய வகையில் இணைத்து விபத்து, உயிரிழப்பை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X