கோலடி சுடுகாடு படுமோசம்சீரமைக்க மக்கள் கோரிக்கை| Dinamalar

கோலடி சுடுகாடு படுமோசம்சீரமைக்க மக்கள் கோரிக்கை

Added : செப் 15, 2022 | |
திருவேற்காடு :திருவேற்காடு நகராட்சிக்கு உட்பட்ட கோலடி பகுதியில் அமைந்துள்ள சுடுகாடு, பல ஆண்டுகளாக பராமரிப்பில்லாமல் புதர் மண்டி காட்சிஅளிக்கிறது.இந்த சுடுகாடை, திருவேற்காடு, அன்பு நகர், ஸ்ரீனிவாசா நகர், செல்லியம்மன் நகர், எம்.ஜி.ஆர்., நகர், கோலடி கிராமம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 8,000த்திற்கும் மேற்பட்டோர் பயன்படுத்தி வருகின்றனர்.திருவேற்காடு நகராட்சி அதிகாரிகள்
கோலடி சுடுகாடு படுமோசம்சீரமைக்க மக்கள் கோரிக்கை

திருவேற்காடு :திருவேற்காடு நகராட்சிக்கு உட்பட்ட கோலடி பகுதியில் அமைந்துள்ள சுடுகாடு, பல ஆண்டுகளாக பராமரிப்பில்லாமல் புதர் மண்டி காட்சிஅளிக்கிறது.இந்த சுடுகாடை, திருவேற்காடு, அன்பு நகர், ஸ்ரீனிவாசா நகர், செல்லியம்மன் நகர், எம்.ஜி.ஆர்., நகர், கோலடி கிராமம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 8,000த்திற்கும் மேற்பட்டோர் பயன்படுத்தி வருகின்றனர்.திருவேற்காடு நகராட்சி அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் இருக்கும் இந்த சுடுகாடில், ஆள் உயரத்துக்கு செடிகள், புதர்கள் வளர்ந்து திகிலாக காட்சி அளிக்கிறது. விஷ ஜந்துக்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளது.



இதனால், இறுதி சடங்கு மற்றும் உடல்களை தகனம் செய்ய வருவோர் அவதிப்படுகின்றனர். இங்கு இறுதி சடங்குகள் செய்வதற்கு, தண்ணீர் உட்பட எந்த அடிப்படை வசதியும் நகராட்சியால் செய்து தரப்படவில்லை. சுடுகாட்டிற்கு அருகாமையில், பெரிய விளையாட்டு மைதானம் உள்ளது. இங்கு நாள்தோறும் நுாற்றுக்கு மேற்பட்டோர் நடை பயிற்சி, உடற்பயிற்சிகள், விளையாட்டு, சிலம்பம் பயிற்சி உள்ளிட்டவற்றை மேற்கொண்டு வருகின்றனர்.



அவ்வாறான சூழ்நிலைகளில், சுடுகாட்டிலிருந்து பாம்புகள் மற்றும் விஷ ஜந்துக்கள் மைதானத்திற்குள் புகுந்து விடுகின்றன. எனவே சம்பந்தப்பட்ட திருவேற்காடு நகராட்சி அதிகாரிகள், சுடுகாடை பராமரித்து போதிய அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என, இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X