'சுதர்ஷனம் வித்யாஷ்ரம்' போட்டி63 பள்ளி அணிகள் உற்சாக பங்கேற்பு

Added : செப் 15, 2022 | |
Advertisement
சென்னை:திருவேற்காடில் உள்ள சுதர்ஷனம் வித்யாஷ்ரம் பள்ளியில் நடந்த விளையாட்டு போட்டியில், 63 பள்ளி அணிகளைச் சேர்ந்த 1,600 மாணவ - மாணவியர் பங்கேற்று அசத்தினர்.பள்ளிகளுக்கு இடையிலான விளையாட்டு போட்டிகள், சமீபத்தில் திருவேற்காடில் உள்ள சுதர்ஷனம் வித்யாஷ்ரம் பள்ளியில் நடந்தது.இரண்டு நாட்கள் நடந்த இப்போட்டியில், பல்வேறு பகுதிகளில் இருந்து, 63 பள்ளிகளைச் சேர்ந்த 1,600 மாணவ -
'சுதர்ஷனம் வித்யாஷ்ரம்' போட்டி63 பள்ளி அணிகள் உற்சாக பங்கேற்பு

சென்னை:திருவேற்காடில் உள்ள சுதர்ஷனம் வித்யாஷ்ரம் பள்ளியில் நடந்த விளையாட்டு போட்டியில், 63 பள்ளி அணிகளைச் சேர்ந்த 1,600 மாணவ - மாணவியர் பங்கேற்று அசத்தினர்.பள்ளிகளுக்கு இடையிலான விளையாட்டு போட்டிகள், சமீபத்தில் திருவேற்காடில் உள்ள சுதர்ஷனம் வித்யாஷ்ரம் பள்ளியில் நடந்தது.

இரண்டு நாட்கள் நடந்த இப்போட்டியில், பல்வேறு பகுதிகளில் இருந்து, 63 பள்ளிகளைச் சேர்ந்த 1,600 மாணவ - மாணவியர் உற்சாகமாக பங்கேற்றனர்.வெற்றி பெற்ற மாணவ - மாணவியருக்கு, 2 லட்சம் மதிப்பிலான கோப்பைகள், பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

பரிசளிப்பு விழாவில் 'பில்லியர்ட்ஸ்' உலக சாம்பியனான ஸ்ரீகிருஷ்ணா சிறப்பு விருந்தினராக பங்கேற்று, ''ஒவ்வொரு பணியையும் ஆர்வமுடனும், மிகுந்த மனப்பான்மையுடன் எதிர்க்கொள்ள வேண்டும்,'' என, மாணவர்களை உற்சாகப்படுத்தி பேசினார்.பள்ளி இயக்குனர் வெங்கடேஷ் ராஜா பேசுகையில், ''விளையாட்டு போட்டியானது, ஒவ்வொரு மாணவர்களின் திறமையை வளர்த்துக் கொள்வதற்கு மட்டுமல்லாமல், அவர்களின் உடல் ஆரோக்கியத்திற்கும், வாழ்க்கையை சமநிலையுடன் கையாளுவதற்குமான திறனை தருகின்றன,'' என்றார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X