பிரதமர் கிசான் திட்டம்: விவசாயிகள் எதிர்பார்ப்பு

Added : செப் 15, 2022 | |
Advertisement
திருவாடானை,-பிரதமர் கிசான் திட்டத்தில் பணம் வரவை எதிர்நோக்கி விவசாயிகள்காத்திருக்கின்றனர்.பிரதமர் கிசான் திட்டத்தில் நிலம் வைத்திருக்கும் அனைத்து விவசாய குடும்பங்களுக்கும் ஆண்டுக்கு தலா ரூ.6000 நிதியுதவி அளிக்கப்படுகிறது.ஒவ்வொரு நான்கு மாதங்களுக்கும் தலா 2000 ரூபாய் வீதம் மூன்று சம தவணைகளில் இந்த பணம் விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது.



திருவாடானை,-பிரதமர் கிசான் திட்டத்தில் பணம் வரவை எதிர்நோக்கி விவசாயிகள்காத்திருக்கின்றனர்.பிரதமர் கிசான் திட்டத்தில் நிலம் வைத்திருக்கும் அனைத்து விவசாய குடும்பங்களுக்கும் ஆண்டுக்கு தலா ரூ.6000 நிதியுதவி அளிக்கப்படுகிறது.ஒவ்வொரு நான்கு மாதங்களுக்கும் தலா 2000 ரூபாய் வீதம் மூன்று சம தவணைகளில் இந்த பணம் விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது. திட்டம் துவக்கப்பட்டது முதல் 10 தவணைகள் சரியாக வரவு வைக்கப்பட்டது.இரு தவணைகள் மட்டும் இன்னும் வரவாகவில்லை. வங்கி கணக்கில் ஆதார் எண் இணைப்பு உள்ளிட்ட பல விதிமுறைகளை சரி செய்ய வேளாண்மை அலுவலர்கள் அறிவுறுத்தினர். அதன்படி சரி செய்யப்பட்டு பல நாட்கள் ஆகியும் பணம் வரவாகவில்லை. வேளாண்மை அலுவலர்கள் கூறுகையில் 15ம் தேதிக்கு பின் விவசாயிகளுக்கு வங்கி கணக்கில் பணம் வரவு வைக்கும் பணிகள் துவங்கும், என்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X