இரட்டை பாதை பணி 4 விரைவு ரயில்கள் ரத்து| Dinamalar

இரட்டை பாதை பணி 4 விரைவு ரயில்கள் ரத்து

Added : செப் 15, 2022 | |
சென்னை:இரட்டை ரயில் பாதை பணி நடக்கவுள்ளதால், விரைவு ரயில்களின் சேவையில், வரும் ௧௯ம் தேதி முதல் மாற்றம் செய்யப்பட உள்ளது.தெற்கு ரயில்வே, செய்திக்குறிப்பு:திருநெல்வேலி - நாகர்கோவில் இடையே இரட்டை பாதை இணைப்பு பணிகள் நடக்கவுள்ளன. இதனால், இந்த தடத்தில் செல்ல வேண்டிய ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.*நாகர்கோவில் - திருநெல்வேலி மாலை 6:40 மணி; திருநெல்வேலி -

சென்னை:இரட்டை ரயில் பாதை பணி நடக்கவுள்ளதால், விரைவு ரயில்களின் சேவையில், வரும் ௧௯ம் தேதி முதல் மாற்றம் செய்யப்பட உள்ளது.

தெற்கு ரயில்வே, செய்திக்குறிப்பு:திருநெல்வேலி - நாகர்கோவில் இடையே இரட்டை பாதை இணைப்பு பணிகள் நடக்கவுள்ளன. இதனால், இந்த தடத்தில் செல்ல வேண்டிய ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

*நாகர்கோவில் - திருநெல்வேலி மாலை 6:40 மணி; திருநெல்வேலி - துாத்துக்குடி காலை 7:35 மணி; துாத்துக்குடி - திருநெல்வேலி மாலை 6:00 மணி விரைவு ரயில்கள், வரும் 25ம் தேதியில் ரத்து செய்யப்படுகின்றன

*துாத்துக்குடி - நாகர்கோவில் காலை 6:35 மணி விரைவு ரயில், வரும் 26ம் தேதி ரத்து செய்யப்படுகிறது


ஒரு பகுதி மட்டும் ரத்து



*தாம்பரம் - நாகர்கோவில் அந்த்யோதயா ரயில், வரும் 19ம் தேதி முதல் 27ம் தேதி வரை, திருநெல்வேலி வரை மட்டுமே இயக்கப்படும்நாகர்கோவில் - தாம்பரம் அந்த்யோதயா ரயில், வரும் 20ம் தேதி முதல் 28 வரை, திருநெல்வேலியில் இருந்து மாலை 505 மணிக்கு புறப்படும்

*சென்ட்ரல் - நாகர்கோவி

*நாகர்கோவில் - சென்ட்ரல் வாராந்திர விரைவு ரயில், வரும் 25ம் தேதி திருநெல்வேலியில் இருந்து இரவு 9:30 மணிக்கு புறப்படும்

*புதுச்சேரி - கன்னியாகுமரி விரைவு ரயில், வரும் 25ம் தேதி திருநெல்வேலி வரை மட்டுமே இயக்கப்படும். கன்னியாகுமரி - புதுச்சேரி விரைவு ரயில், வரும் 26ம் தேதி திருநெல்வேலியில் இருந்து மாலை 3:40 மணிக்கு புறப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X