அர்ச்சுனன் போல் வாழ கற்றுக் கொள்ளுங்கள்| Dinamalar

அர்ச்சுனன் போல் வாழ கற்றுக் கொள்ளுங்கள்

Added : செப் 15, 2022 | |
ராமேஸ்வரம்--'மகாபாரத அர்ச்சுனன் போல் நாமும் வாழ கற்றுக்கொள்ள வேண்டும்,' என திருச்சி கல்யாணராமன் பேசினார்.ராமேஸ்வரத்தில் ஸ்ரீ ராகவேந்திரா சுவாமிகள்மடத்தில் மகாபாரத சொற்பொழிவு நிகழ்ச்சி நடக்கிறது. 5ம் நாளான நேற்று 'அர்ச்சுனன் தவம்' என்ற தலைப்பில் திருச்சி கல்யாணராமன் ஆன்மிக சொற்பொழிவாற்றினார்.அவர் பேசியது:'பாசுபதம்' வாங்க சிவனை நோக்கி அர்ச்சுனன் தவம்



ராமேஸ்வரம்--'மகாபாரத அர்ச்சுனன் போல் நாமும் வாழ கற்றுக்கொள்ள வேண்டும்,' என திருச்சி கல்யாணராமன் பேசினார்.ராமேஸ்வரத்தில் ஸ்ரீ ராகவேந்திரா சுவாமிகள்மடத்தில் மகாபாரத சொற்பொழிவு நிகழ்ச்சி நடக்கிறது. 5ம் நாளான நேற்று 'அர்ச்சுனன் தவம்' என்ற தலைப்பில் திருச்சி கல்யாணராமன் ஆன்மிக சொற்பொழிவாற்றினார்.அவர் பேசியது:'பாசுபதம்' வாங்க சிவனை நோக்கி அர்ச்சுனன் தவம் செய்தார். இத்தவம் செய்பவர்கள் காமம், கோபத்தை விட்டு விட வேண்டும். ஊர்வசி நடனமாடி அவருடைய தவத்தை கலைக்க முயன்று ஏமாந்து போகிறாள். இந்திரன் முதியவராக வந்து கோபம் வரவழைக்க சோதனை செய்து தோற்று போகிறான்.நாமும் கடவுளை வணங்க அர்ச்சுனன் போல் கோபம், காமத்தை கைவிட வேண்டும். அர்ச்சுனன் இந்திரலோகம்சென்றதும், இவரது அழகில் மயங்கிய ஊர்வசி, தன்னை அடைய சொன்னாள். ஆனால் அவளை வணங்கிய அர்ச்சுனன், 'என் தந்தை இந்திரன் தங்களை அடைந்ததால் நீங்கள் எனக்கு தாய், தகாத எண்ணத்தில் வராதீர்கள், என்றார். அதற்கு அவள் சபித்தாள். ஓர் ஆண்மகன்கற்போடு இருப்பது கடினம்.இதைத் தான் பாரதியார், 'ஆணுக்கும், பெண்ணுக்கும் கற்பினை பொதுவில் வைப்போம்,' என்றார். வள்ளுவன், 'பிறன் மனை நோக்கா பேராண்மை,' என்றார். நாமும் அர்ச்சுனன் போல் பக்தியை கடைப்பிடித்தால் சிவன் அருளை பெறலாம், என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X