கூட்டுறவு நகர் சாலை சந்திப்பு சீரமைப்பது எப்போது?| Dinamalar

கூட்டுறவு நகர் சாலை சந்திப்பு சீரமைப்பது எப்போது?

Added : செப் 15, 2022 | |
ஆதம்பாக்கம், "சென்னை மாநகராட்சியின் ஆலந்துார் மண்டலம், ஆதம்பாக்கத்தில் கூட்டுறவு நகர் அமைந்துள்ளது. அந்நகரில் உள்ள பல தெருக்களில் நுாற்றுக்ணக்கான குடும்பங்கள் வசித்து வருகின்றன.உள்ளகரம், மடிப்பாக்கத்தை சேர்ந்தவர்கள் வேளச்சேரி- - மவுன்ட் உள்வட்ட சாலையை கடந்து, இந்த நகர் வழியாக ஆதம்பாக்கம், ஆலந்துாருக்கு செல்கின்றனர். ஏராளமான இரு, நான்கு சக்கர வாகனங்கள் தினசரி
கூட்டுறவு நகர்  சாலை சந்திப்பு சீரமைப்பது எப்போது?


ஆதம்பாக்கம், "சென்னை மாநகராட்சியின் ஆலந்துார் மண்டலம், ஆதம்பாக்கத்தில் கூட்டுறவு நகர் அமைந்துள்ளது. அந்நகரில் உள்ள பல தெருக்களில் நுாற்றுக்ணக்கான குடும்பங்கள் வசித்து வருகின்றன.உள்ளகரம், மடிப்பாக்கத்தை சேர்ந்தவர்கள் வேளச்சேரி- - மவுன்ட் உள்வட்ட சாலையை கடந்து, இந்த நகர் வழியாக ஆதம்பாக்கம், ஆலந்துாருக்கு செல்கின்றனர். ஏராளமான இரு, நான்கு சக்கர வாகனங்கள் தினசரி சென்று வருகின்றன.கூட்டுறவு நகரின் நுழைவாயிலில், நேரு தெரு, ராமராஜன் தெரு அமைந்துள்ளது.



இத்தெருக்கள் சந்திப்பில் கழிவு நீர் அகற்று வாரியத்தின் அலுவலகம் அமைந்துள்ளது. வாரிய திட்டத்திற்காக இரண்டு ஆண்டுகளுக்கு முன் சாலை தோண்டப்பட்டது. இன்று வரை அதை முழுமையாக சீரமைக்கவில்லை.உள்வட்ட சாலையில் இருந்து செல்லும் வாகன ஓட்டிகள், சைக்கிளில் செல்லும் மாணவ - மாணவியர் தடுமாறி விழுந்து விபத்துக்களை சந்தித்து வருகின்றனர்.சிறுமழை பெய்தாலும் சகதி நிறைந்து, போக்குவரத்து பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பிட்ட சந்திப்பு பகுதியை முழுமையாக சீரமைக்க வேண்டும் என நகர் நலச்சங்கத்தினர் கோரியுள்ளனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X