வண்டலுாரில் காட்டு மாடு சீதாஆண் குட்டியை ஈன்றது

Added : செப் 15, 2022 | |
Advertisement
தாம்பரம்: வண்டலுார் உயிரியல் பூங்காவில், 26 வயதான காட்டுமாடு சீதா, ஆண் குட்டியை ஈன்றுள்ளது. அதேபோல், சதுப்பு நில முதலைகள், 45 குஞ்சுகள் பொரித்துள்ளன.வண்டலுார் உயிரியல் பூங்காவில், 40 காட்டு மாடுகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இதில், 26 வயதான சீதா என்ற காட்டுமாடு, சில வாரங்களுக்கு முன் ஆண் குட்டி ஒன்றை ஈன்றது. குட்டியும், தாயும் நலமாக உள்ளன. அதேபோல், 25 வயதான புனிதா என்ற
வண்டலுாரில் காட்டு மாடு சீதாஆண் குட்டியை ஈன்றது

தாம்பரம்: வண்டலுார் உயிரியல் பூங்காவில், 26 வயதான காட்டுமாடு சீதா, ஆண் குட்டியை ஈன்றுள்ளது. அதேபோல், சதுப்பு நில முதலைகள், 45 குஞ்சுகள் பொரித்துள்ளன.வண்டலுார் உயிரியல் பூங்காவில், 40 காட்டு மாடுகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
இதில், 26 வயதான சீதா என்ற காட்டுமாடு, சில வாரங்களுக்கு முன் ஆண் குட்டி ஒன்றை ஈன்றது. குட்டியும், தாயும் நலமாக உள்ளன. அதேபோல், 25 வயதான புனிதா என்ற காட்டுமாடு, ஆகஸ்ட் மாதம் பெண் குட்டி ஒன்றை ஈன்றது. இந்த இரண்டு குட்டிகளும், அதன் தாய்களுடன் விளையாடுவதை பார்வையாளர்கள் கண்டு ரசிக்கின்றனர்.
இதேபோல், இப்பூங்காவில் 69 சதுப்பு நில முதலைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்த முதலைகள், 45 குஞ்சுகளை பொரித்துள்ளன. இந்த முதலை குஞ்சுகளை, காகம், பறவைகள் துாக்கி செல்லாமல் தடுக்க, பாதுகாக்கப்பட்ட கூண்டில் தனியாக வைத்து பராமரித்து வருகின்றனர்.முதலை குஞ்சுகளுக்காக, சுற்றி கம்பி வேலி பொருத்தப்பட்ட கூண்டு ஒன்றை தயார் செய்யும் பணி நடக்கிறது. இப்பணி முடிந்ததும், அந்த கூண்டில் முதலை குஞ்சுகள் விடப்படும் என்று தெரிகிறது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X