காலை உணவு திட்டம் அரசுக்கு செலவல்ல; கடமை!முதல்வர் ஸ்டாலின் பேச்சு

Added : செப் 15, 2022 | கருத்துகள் (4) | |
Advertisement
மதுரை:''அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை செலவாக கருதாமல், அரசின் கடமையாக நினைக்கிறேன்,'' என, முதல்வர் ஸ்டாலின் பேசினார்.மதுரையில், ஆதிமூலம் மாநகராட்சி தொடக்க பள்ளியில், இத்திட்டத்தை துவக்கி வைத்து அவர் பேசியதாவது:அரசு பள்ளிக்கு பசியோடு வரும் பிள்ளைகளுக்கு, முதலில் உணவு, பின் கல்வி அளிக்கும் வகையில் இத்திட்டம்
காலை உணவு திட்டம் அரசுக்கு செலவல்ல; கடமை!முதல்வர் ஸ்டாலின் பேச்சு

மதுரை:''அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை செலவாக கருதாமல், அரசின் கடமையாக நினைக்கிறேன்,'' என, முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

மதுரையில், ஆதிமூலம் மாநகராட்சி தொடக்க பள்ளியில், இத்திட்டத்தை துவக்கி வைத்து அவர் பேசியதாவது:அரசு பள்ளிக்கு பசியோடு வரும் பிள்ளைகளுக்கு, முதலில் உணவு, பின் கல்வி அளிக்கும் வகையில் இத்திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் நடைமுறையில் உள்ள இத்திட்டம் மூலம், மாணவர் கற்றல் திறன் மேம்பட்டு வருகை அதிகரித்ததாக ஆய்வு தெரிவிக்கிறது.

நிதிச்சுமை இருந்தாலும், பசி சுமையை போக்க தொடர்ந்து செயல்படுத்துவோம். குழந்தை, கர்ப்பிணியருக்கான ஊட்டச்சத்து திட்டத்தை, 1971ல் கருணாநிதி செயல்படுத்தினார்.எம்.ஜி.ஆர்., அதிக மையங்களை உருவாக்கி, சத்துணவு திட்டத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கினார். 1989ல் ஆட்சிக்கு வந்த கருணாநிதி, சத்துணவுடன் முட்டை, கொண்டை கடலை, பச்சைப்பயிறு என, கூடுதலாக வழங்கினார்.ஜெயலலிதா ஆட்சியில் கலவை சாதமாக வழங்கப்பட்டது.

இவை அனைத்தும் மதிய உணவு திட்டம்.சென்னையில் பள்ளி ஆய்வுக்கு நான் சென்றபோது, மாணவர்கள் காலையில் சாப்பிடாமல் வந்தது அறிந்து அதிர்ச்சிஅடைந்தேன். என் எண்ணத்தில் அப்போது உதித்தது தான் இத்திட்டம்.

தற்போது முதற்கட்டமாக, 1,545 பள்ளிகளில், 1.14 லட்சம் குழந்தைகளுக்கு உணவு வழங்கப்படும். ஒரு குழந்தைக்கு நாள் ஒன்றுக்கு, 12.75 ரூபாய் செலவாகிறது. இது செலவல்ல; அரசின் கடமை. தங்கள் குழந்தை போல் கருதி, அதிகாரிகள் தரமான உணவு வழங்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.அமைச்சர்கள் கீதா ஜீவன், வேலு, மூர்த்தி, பெரியகருப்பன், தியாகராஜன், கூடுதல் தலைமை செயலர் ஷம்பு கலோலிகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தட்டில் கை கழுவுவதா? முதல்வருக்கு கண்டனம்!



''முதல்வர் ஆரம்பித்த திட்டத்தை, முதல்வரே அவமானப்படுத்தும் நிலை உள்ளது,'' என, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்தார்.அவர் அளித்த பேட்டி:முதல்வர் துவக்கி வைத்த காலை உணவு திட்டத்தில், முதல்வருக்கு மட்டும் புதிய 'எவர்சில்வர்' தட்டு, 'ஸ்பூன்' அளித்தனர். சாப்பாடு வைத்ததும், அதை முழுமையாக சாப்பிட வேண்டும்; இரண்டு வாய் எடுத்து வைத்திருப்பார். அதற்குள் அந்த தட்டிலேயே கையை கழுவி விட்டார்.

முதல்வர் ஆரம்பித்த திட்டத்தை, முதல்வரே அவமானப்படுத்தும் நிலை உள்ளது. விவசாயிகள் கஷ்டப்பட்டு உற்பத்தி செய்த உணவுப்பொருளை, கை கழுவி வீணடித்துள்ளார். பன்னீர்செல்வம் - பண்ருட்டி ராமசந்திரன் சந்திப்பால் எந்த பிரச்னையும் இல்லை. ஒட்டுமொத்த அ.தி.மு.க.,வும் பழனிசாமி தலைமையின் கீழ் செயல்படுகிறது. 'ஜெயலலிதாவை பார்ப்பதுபோல், மக்கள் என்னை பார்க்கின்றனர்' என சசிகலா கூறுவதை, ஜோக்காக எடுத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.



புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankar - Nellai,இந்தியா
16-செப்-202213:59:36 IST Report Abuse
sankar காமராசரும், எம்ஜியாரும் செய்தது கடமை - இது வெறும் விளம்பரம்
Rate this:
Cancel
Nakkeeran - Hosur,இந்தியா
16-செப்-202213:33:38 IST Report Abuse
Nakkeeran 1545 பள்ளிகள் , 1.14 லட்சம் சிறுவர்கள் எனில் சராசரியாக ஒரு பள்ளிக்கு 75 மாணவர்கள் மட்டுமே வருகிறது .அரசு பள்ளிகளில் அவ்வளவு மாணவர்கள் மட்டும்தான் இருக்கிறார்களா
Rate this:
Cancel
RaajaRaja Cholan - Montpellier,பிரான்ஸ்
16-செப்-202210:03:43 IST Report Abuse
RaajaRaja Cholan நீங்க என்ன பேசினாலும் , அது நீங்க பேசியது போல ஒரு நாளும் தோன்றியதில்லை , எவனோ எழுதி கொடுத்ததை பார்த்து பாக்காமலும் பேசியது போல உள்ளது , தங்கள் நடவடிக்கை பொதுவெளிகளில் அப்படி தோன்ற வைக்குது , அப்படி எழுதி கொடுத்தியாவது சிறப்பாக செய்கிறீர்களா என்றால் இல்லை. அதாவது சொல் புத்தியும் சுய புத்தியும் இல்லாத ஒருவர் கூட இதை விட சிறப்பாக செய்யப்படலாம் . தமிழ் நாட்டின் கஷ்ட காலம் , எடப்பாடி அவர்கள் இதை விட நூறு மடங்கு சிறப்பானவர் நிர்வாகத்தில் என்று கூறலாம் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X