காப்பக சிறுமி பலாத்கார வழக்கு தலைமறைவு பாதிரியார் கைது

Added : செப் 15, 2022 | |
Advertisement
மாமல்லபுரம்:கல்பாக்கம் அடுத்த வாயலுார் பகுதியில், மேரியெல்லா குழந்தைகள் காப்பகம் இயங்குகிறது. இதே பகுதி, துரைராஜின் மகன் சார்லஸ், 59, என்பவர், இதை நடத்தி வருகிறார்.செங்கல்பட்டு அருகாமை கிராம பெற்றோர், ஆறு வயது மகளை, வளர்க்க இயலாமல், 2005ல், காப்பகத்தில் ஒப்படைத்தனர்.அங்கு தங்கி படித்து வந்த சிறுமிக்கு, 13 வயதானபோது, பாதிரியார், அவரது மகன் ஜேம்ஸ், 29, ஆகியோர் பலாத்காரம்

மாமல்லபுரம்:கல்பாக்கம் அடுத்த வாயலுார் பகுதியில், மேரியெல்லா குழந்தைகள் காப்பகம் இயங்குகிறது. இதே பகுதி, துரைராஜின் மகன் சார்லஸ், 59, என்பவர், இதை நடத்தி வருகிறார்.
செங்கல்பட்டு அருகாமை கிராம பெற்றோர், ஆறு வயது மகளை, வளர்க்க இயலாமல், 2005ல், காப்பகத்தில் ஒப்படைத்தனர்.அங்கு தங்கி படித்து வந்த சிறுமிக்கு, 13 வயதானபோது, பாதிரியார், அவரது மகன் ஜேம்ஸ், 29, ஆகியோர் பலாத்காரம் செய்துள்ளனர். இதுபற்றி, பிறரிடம் தெரிவிக்க கூடாதென மிரட்டி, அறையில் பூட்டியும் வைத்துள்ளனர்.
அவர் கர்ப்பமடைந்த நிலையில், கடந்த ஆண்டு துவக்கத்தில், அங்கிருந்து தப்பி, சென்னை உறவினரிடம் தஞ்சமடைந்தார்.பலாத்காரத்தால் அடைந்த கர்ப்பம் குறித்து, கடந்த ஆண்டு பிப்ரவரியில் மாமல்லபுரம் மகளிர் போலீசில், உறவினர் பெண் புகார் அளித்தார்.
போலீசார், தந்தை, மகன் மீது 'போக்சோ' வழக்கு பதிந்து, மகனை கைது செய்தனர். தந்தை, ஒன்றரை ஆண்டுகளாக தலைமறைவாகி, போலீசார் தேடினர். இந்நிலையில் நேற்று, போலீஸ் இன்ஸ்பெக்டர் கீதாலட்சுமி, சார்லஸ்ர கைது செய்து, சிறையில் அடைத்தார். அப்பெண்ணிற்கு மகன் பிறந்து, தற்போது இரண்டரை வயதாகிறது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X