மது பரிசோதனை 'ஸ்ட்ரா' பற்றாக்குறைதொடர்கிறது பழைய நடைமுறை

Added : செப் 15, 2022 | |
Advertisement
சென்னை :சென்னையில் வாகன பரிசோதனையின்போது, வாகன ஓட்டிகள் மது அருந்தியுள்ளனரா என, போக்குவரத்து போலீசார் முகத்திற்கு நேராக ஊத சொல்வது, பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.சென்னை போலீஸ் கமிஷனரகத்தின் கீழ் 55 போக்குவரத்து காவல் நிலையங்கள் உள்ளன. அவற்றில் பணிபுரியும் இன்ஸ்பெக்டர்கள், எஸ்.ஐ., தங்களது பகுதிகளில், தினசரி இரவு நேரங்களில், வாகன தணிக்கையில் ஈடுபட்டு

சென்னை :சென்னையில் வாகன பரிசோதனையின்போது, வாகன ஓட்டிகள் மது அருந்தியுள்ளனரா என, போக்குவரத்து போலீசார் முகத்திற்கு நேராக ஊத சொல்வது, பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.சென்னை போலீஸ் கமிஷனரகத்தின் கீழ் 55 போக்குவரத்து காவல் நிலையங்கள் உள்ளன. அவற்றில் பணிபுரியும் இன்ஸ்பெக்டர்கள், எஸ்.ஐ., தங்களது பகுதிகளில், தினசரி இரவு நேரங்களில், வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.அப்போது, மது அருந்தி வருவோரை அடையாளம் கண்டறிவதற்காக, ஒவ்வொரு எஸ்.ஐ.,க்கும் மது பரிசோதனை கருவி வழங்கப்பட்டுள்ளது.

ஆனால், மது பரிசோதனை கருவியில் பயன்படுத்தப்படும் 'ஸ்ட்ரா' போதுமான அளவில் வழங்கப்படுவதில்லை. இதனால், வேறு வழியின்றி வாகன தணிக்கையில் ஈடுபடும் போக்குவரத்து போலீசார், வாகன ஓட்டிகளை முகத்திற்கு நேராக ஊதும் படி வலியுறுத்துகின்றனர்.இவற்றால் வாகன ஓட்டிகளுக்கும், போக்குவரத்து போலீசாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வருகிறது.இதை எஸ்.ஐ.,க்கள் சட்டையில் பொருத்தப்பட்டிருக்கும் கேமரா வாயிலாக உயர் அதிகாரிகள் கண்காணித்தாலும், பிரச்னைக்கான தீர்வை ஏற்படுத்துவதில்லை.

இது குறித்து போக்குவரத்து எஸ்.ஐ., கூறியதாவது:சென்னையில் இரவு நேரங்களில் வாகன தணிக்கையில் ஈடுபடும் எஸ்.ஐ.,களுக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாளும் நுாற்றுக்கணக்கான வாகனங்களை மடக்கி, ஓட்டுனர்கள் மது அருந்தி இருக்கின்றனரா என்பதை பரிசோதனை செய்கிறோம்.ஒரு நாளைக்கு 100 'ஸ்ட்ரா' மட்டுமே வழங்கப்படுகிறது. இப்படி இருக்க, வேறு வழியின்றி நாங்கள் ஓட்டுனர்களிடம் தங்களது முகத்திற்கு நேராக ஊதும்படி கூறி, திட்டு வாங்கி கொள்கிறோம். இவையெல்லாம், உயரதிகாரிகளுக்கு தெரிந்தும் கண்டு கொள்வதில்லை.இவ்வாறு அவர்கள் கூறினர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X