நிர்வாண புகைப்பட விவகாரம்; நடிகர் ரன்வீர் சிங் வாக்குமூலம்

Updated : செப் 15, 2022 | Added : செப் 15, 2022 | கருத்துகள் (3) | |
Advertisement
மும்பை-''என் புகைப்படம் ஒன்று திரித்து வெளியிடப்பட்டுள்ளது,'' என, பிரபல பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்து உள்ளார். பிரபல பாலிவுட் நடிகர் ரன்வீர்சிங்கின் நிர்வாண படங்கள், ஜூலையில் சமூக வலைதளம் ஒன்றில் வெளியானது.இதையடுத்து, சமூக சேவகர் ஒருவர் அதில் ஒரு படத்தை இணைத்து அளித்த புகார்படி, மும்பை செம்பூர் போலீசார் ரன்வீர் சிங் மீது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

மும்பை-''என் புகைப்படம் ஒன்று திரித்து வெளியிடப்பட்டுள்ளது,'' என, பிரபல பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்து உள்ளார்.



latest tamil news



பிரபல பாலிவுட் நடிகர் ரன்வீர்சிங்கின் நிர்வாண படங்கள், ஜூலையில் சமூக வலைதளம் ஒன்றில் வெளியானது.இதையடுத்து, சமூக சேவகர் ஒருவர் அதில் ஒரு படத்தை இணைத்து அளித்த புகார்படி, மும்பை செம்பூர் போலீசார் ரன்வீர் சிங் மீது வழக்குப் பதிவு செய்தனர்.இது தொடர்பான விசாரணையில், புகாருக்குள்ளான புகைப்படம், சமூக வலைதளத்தில், தான் வெளியிட்ட படங்களில் இல்லை என்றும், அது, திரித்து வெளியிடப்பட்டுள்ளது என்றும்ரன்வீர் சிங் வாக்குமூலம் அளித்துள்ளார்.


latest tamil news


இதையடுத்து, அந்தப் படத்தை தடயவியல் பரிசோதனைக்கு அனுப்ப இருப்பதாக செம்பூர் போலீசார் கூறினர். இந்நிலையில், ''நான் வெளியிட்ட இந்தப் படங்களில் ஆபாசம் எதுவும் இல்லை. அவற்றில் நான் உள்ளாடை அணிந்து தான் இருக்கிறேன்,'' என, ரன்வீர் சிங் தெரிவித்துள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
16-செப்-202212:31:15 IST Report Abuse
ஆரூர் ரங் ஆளவந்தான் படத்தில் இதைவிட மோசமான காட்சியை சென்சார்😶 அனுமதித்திருக்கிறார்கள் .
Rate this:
Cancel
jayvee - chennai,இந்தியா
16-செப்-202211:01:54 IST Report Abuse
jayvee இவன் ஒரு சரியான ஹைப்பர் ஆக்டிவ் பைத்தியம்..
Rate this:
Cancel
BalaG -  ( Posted via: Dinamalar Android App )
16-செப்-202200:06:00 IST Report Abuse
BalaG இந்த விளம்பரம் உனக்கு தேவையா? இந்த போட்டோவை போட்டுட்டு பெருமையை பேசிய வாய் இன்னைக்கு எதுக்கு பயந்துகிட்டு பேசுது? இந்த விளம்பரம் உனக்கு தேவையா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X