தலைமை சர்வேயர் பணியிடம் காலிகுன்றத்துாரில் பட்டா பெறுவதில் சிக்கல்

Added : செப் 15, 2022 | |
Advertisement
குன்றத்துார், :குன்றத்துார் தாலுகா அலுவலகத்தில், தலைமை சர்வேயர் பணியிடம் காலியாக உள்ளதால், பட்டா வினியோகிப்பதில் கால தாமதம் ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றஞ் சாட்டியுள்ளனர்.ஸ்ரீ பெரும்புதுார் தாலுகாவில் இருந்து, குன்றத்துார் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளை தனியாக பிரித்து, குன்றத்துார் தாலுகா உருவாக்கப்பட்டது.இதன் அலுவலகம், குன்றத்துார் நான்கு சாலைகள் சந்திப்பில்,

குன்றத்துார், :குன்றத்துார் தாலுகா அலுவலகத்தில், தலைமை சர்வேயர் பணியிடம் காலியாக உள்ளதால், பட்டா வினியோகிப்பதில் கால தாமதம் ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றஞ் சாட்டியுள்ளனர்.ஸ்ரீ பெரும்புதுார் தாலுகாவில் இருந்து, குன்றத்துார் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளை தனியாக பிரித்து, குன்றத்துார் தாலுகா உருவாக்கப்பட்டது.இதன் அலுவலகம், குன்றத்துார் நான்கு சாலைகள் சந்திப்பில், சேக்கிழார் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி வளாகத்தில் உள்ள கட்டடத்தில் இயங்கி வருகிறது.

தலைமை சர்வேயர் பணியிடம், பல மாதங்களாக காலியாகவே உள்ளது. உத்திரமேரூர் தாலுகாவை சேர்ந்த அதிகாரி, கூடுதல் பொறுப்பாக கவனித்து வருவதால், அவர் வாரத்திற்கு இரண்டு நாட்கள் மட்டுமே வருவதாக கூறப்படுகிறது. இதனால், பட்டா வினியோகம், நிலம் அளவீடு செய்வது போன்ற பணிகளில் காலதாமதம் ஏற்படுவதாக புகார் எழுந்துள்ளது.தாலுகா அலுவலகம் செயல்படும் கட்டடத்தில் ஒன்றரை ஆண்டுக்கு மேலாக, உரிய அடிப்படை வசதிகள் இல்லை. கழிப்பறை முறையாக சுத்தம் செய்யப்படுவதில்லை.

இதனால், பல்வேறு பணிகளுக்காக வரும் மக்கள் பெரும் சிரமப்படுகின்றனர். குறிப்பாக, பெண்கள், முதியவர்கள் கழிப்பறை இல்லாததால், சொல்ல முடியாத துயரத்திற்கு ஆளாகின்றனர்.எனவே, மாவட்ட கலெக்டர் தலையிட்டு, தலைமை சர்வேயர் பணியிடத்தை உடனடியாக நிரப்பவும், பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X