அங்கீகாரமில்லாத மனை பத்திரங்கள் எத்தனை?

Added : செப் 16, 2022 | |
Advertisement
சென்னை:அங்கீகாரமில்லாத மனை தொடர்பாக, பதிவுத் துறை தலைவர் பிறப்பித்துள்ள உத்தரவு:அங்கீகாரமில்லாத மனைகள் தொடர்பான பத்திரங்களை நிராகரிக்கும் அதிகாரத்தை, சார் - பதிவாளர்கள் முறையாக பயன்படுத்தவில்லை என தெரிய வந்துள்ளது. இது தொடர்பான வழக்கில், உயர் நீதிமன்ற மதுரை கிளை, மூன்று வகை விபரங்களை கேட்டு உள்ளது. இதன்படி, தடை விதிக்கப்பட்ட நாளுக்கு பின் பதிவான அங்கீகாரமில்லாத

சென்னை:அங்கீகாரமில்லாத மனை தொடர்பாக, பதிவுத் துறை தலைவர் பிறப்பித்துள்ள உத்தரவு:அங்கீகாரமில்லாத மனைகள் தொடர்பான பத்திரங்களை நிராகரிக்கும் அதிகாரத்தை, சார் - பதிவாளர்கள் முறையாக பயன்படுத்தவில்லை என தெரிய வந்துள்ளது.

இது தொடர்பான வழக்கில், உயர் நீதிமன்ற மதுரை கிளை, மூன்று வகை விபரங்களை கேட்டு உள்ளது. இதன்படி, தடை விதிக்கப்பட்ட நாளுக்கு பின் பதிவான அங்கீகாரமில்லாத மனைப் பத்திரங்களின் எண்ணிக்கை, தவறுதலாக பதிவான பத்திரங்கள் விஷயத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கை; இத்தகைய பத்திரங்கள் பதிவாவதை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை ஆகிய விபரங்கள் தேவை.

இந்த விபரங்களை, சம்பந்தப்பட்ட சார் - பதிவாளர் அலுவலகங்களில் இருந்து பெற்று தொகுத்து, வரும் 19க்குள் தலைமை அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X