வேலை தருவதாக கூறி ரூ.14 லட்சம் மோசடி

Added : செப் 16, 2022 | |
Advertisement
சேலம்:வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி, 'ஆன்லைன்' மூலம், வாலிபரிடம், 14 லட்சம் ரூபாய் மோசடி செய்த வட மாநில கும்பல் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.சேலம், கொண்டலாம்பட்டி அருகே ஊஞ்சக்காடு, லட்சுமி நகரைச் சேர்ந்த சுந்தர்ராஜன் மகன் உமாசங்கர், 23. இன்ஜினியரிங் படித்த இவர், வெளிநாட்டில் வேலை தேடி வந்தார்.இவரது மின்னஞ்சலுக்கு, ஜூன் 10ல், கனடா நாட்டின், 'விவன் பார்மா'

சேலம்:வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி, 'ஆன்லைன்' மூலம், வாலிபரிடம், 14 லட்சம் ரூபாய் மோசடி செய்த வட மாநில கும்பல் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
சேலம், கொண்டலாம்பட்டி அருகே ஊஞ்சக்காடு, லட்சுமி நகரைச் சேர்ந்த சுந்தர்ராஜன் மகன் உமாசங்கர், 23. இன்ஜினியரிங் படித்த இவர், வெளிநாட்டில் வேலை தேடி வந்தார்.இவரது மின்னஞ்சலுக்கு, ஜூன் 10ல், கனடா நாட்டின், 'விவன் பார்மா' நிறுவனத்தில் வேலை இருப்பதாக தகவல் வந்தது.
அதை நம்பி, அதில் குறிப்பிட்டிருந்த எண்களில் தொடர்பு கொண்டு பேசினார்.எதிர் முனையில் பேசிய மர்ம நபர், 'மாதம், 2 லட்சம் ரூபாய் சம்பளத்தில் பணி உள்ளது' என தெரிவித்தார். அத்துடன், விசா, மருத்துவ சோதனை, போலீசின் நற்சான்றிதழ், 'தீவிரவாத தொடர்பு இல்லை' என்ற சான்றிதழ் உள்ளிட்டவற்றிற்கு கட்டணம் செலுத்த கூறியுள்ளார்.
அதை நம்பிய உமாசங்கர், பல தவணைகளாக, 14 லட்சத்து, 63 ஆயிரம் ரூபாய் செலுத்தி உள்ளார். பணம் சென்றடைந்த நிலையில், மோசடி கும்பல், மொபைல் போனை அணைத்து விட்டது.ஏமாற்றப்பட்டதை உணர்ந்த உமாசங்கர், நேற்று முன்தினம், சேலம் மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.மேற்கு வங்கம் உள்ளிட்ட வட மாநில கும்பல் கைவரிசை காட்டியது, முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது என, போலீசார் தெரிவித்தனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X