சேற்றில் சிக்கிய பள்ளி பஸ்;கிரேன் உதவியுடன் மீட்பு| Dinamalar

சேற்றில் சிக்கிய பள்ளி பஸ்;கிரேன் உதவியுடன் மீட்பு

Added : செப் 16, 2022 | |
திருப்பூர்:திருப்பூரில் பள்ளி மாணவர்களுடன் சேற்றில் சிக்கி கொண்ட பள்ளி பஸ், கிரேன் உதவியுடன் மீட்கப்பட்டது.திருப்பூர், பல்லடம் ரோடு, சந்தைபேட்டை அருகே தென்னம்பாளையத்தில் இருந்து காட்டுவளவு வரை பாதாள சாக்கடை கால்வாய் கட்டும் பணி நடந்து வருகிறது.நேற்று இவ்வழியாக தாராபுரத்தில் இருந்து திருப்பூர் நோக்கி வந்த தனியார் பள்ளியின் பஸ் மாணவர்களுடன் வந்து கொண்டிருந்தது.
சேற்றில் சிக்கிய பள்ளி பஸ்;கிரேன் உதவியுடன் மீட்பு

திருப்பூர்:திருப்பூரில் பள்ளி மாணவர்களுடன் சேற்றில் சிக்கி கொண்ட பள்ளி பஸ், கிரேன் உதவியுடன் மீட்கப்பட்டது.திருப்பூர், பல்லடம் ரோடு, சந்தைபேட்டை அருகே தென்னம்பாளையத்தில் இருந்து காட்டுவளவு வரை பாதாள சாக்கடை கால்வாய் கட்டும் பணி நடந்து வருகிறது.நேற்று இவ்வழியாக தாராபுரத்தில் இருந்து திருப்பூர் நோக்கி வந்த தனியார் பள்ளியின் பஸ் மாணவர்களுடன் வந்து கொண்டிருந்தது. அப்போது, காட்டுவளவு ரோட்டில், தோண்டி மூடிய குழியில் இடதுபுற முன்பக்க சக்கரம் சிக்கி கொண்டது.பஸ்ஸை வெளியேற்ற டிரைவர் முயற்சித்த போது சேறும், சகதியுமாக இருந்ததால், அரை சக்கரம் வரை தண்ணீரில் முழ்கிவிட்டது. யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை. பஸ்சில் இருந்த பத்து மாணவர்கள் பஸ்சில் இருந்து பாதுகாப்பாக இறக்கி விடப்பட்டனர். தெற்கு போலீசார் கிரேன் வரவழைத்து, பள்ளி பஸ்ஸை மீட்டு, அனுப்பி வைத்தனர்.---திருப்பூர், காட்டுவளவு அருகே சேற்றில் சிக்கிய தனியார் பள்ளி பஸ்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X