சீன அதிபர் ஜிங்பிங்கை சந்திக்கிறார் மோடி?

Updated : செப் 16, 2022 | Added : செப் 16, 2022 | கருத்துகள் (3) | |
Advertisement
புதுடில்லி-உஸ்பெகிஸ்தானில் நடக்கும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டில் பங்கேற்கும் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சீன அதிபர் ஷீ ஜிங்பிங் இடையேயான தனிப்பட்ட சந்திப்பு நடைபெறுமா என்பது உறுதி செய்யப்படவில்லை. நம் அண்டை நாடான சீனாவின் பீஜிங்கை தலைமையிடமாக வைத்து செயல்படும், எஸ்.சி.ஓ., எனப்படும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில், சீனா, ரஷ்யா, இந்தியா உட்பட,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி-உஸ்பெகிஸ்தானில் நடக்கும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டில் பங்கேற்கும் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சீன அதிபர் ஷீ ஜிங்பிங் இடையேயான தனிப்பட்ட சந்திப்பு நடைபெறுமா என்பது உறுதி செய்யப்படவில்லை.



latest tamil news


நம் அண்டை நாடான சீனாவின் பீஜிங்கை தலைமையிடமாக வைத்து செயல்படும், எஸ்.சி.ஓ., எனப்படும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில், சீனா, ரஷ்யா, இந்தியா உட்பட, எட்டு நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.அரசியல், பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு அம்சங்களில் ஒத்துழைத்து செயல்படுவதற்காக இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது.

இதன் மாநாடு, மத்திய ஆசிய நாடான உஸ்பெகிஸ்தானின் சமர்கண்ட் நகரில் இன்று நடக்கிறது. இதில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி நேற்று புறப்பட்டு சென்றார். இதற்கு முன் வெளியிட்டுள்ள அறிக்கையில் மோடி கூறியுஉள்ளதாவது:இந்த மாநாட்டில், பிராந்திய மற்றும் சர்வதேச பிரச்னைகள் குறித்தும், அமைப்பை விரிவுபடுத்துவது குறித்தும், அமைப்பில் உள்ள நாடுகள் இடையே ஆழமான புரிந்துணர்வை வலுப்படுத்தும் வகையிலும் ஆலோசனைகள் நடக்கும் என எதிர்பார்க்கிறேன்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில், இந்த மாநாட்டுக்கு இடையே, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், உஸ்பெகிஸ்தான் அதிபர் ஷவ்கட் மிர்சியோயேவ் உள்ளிட்ட தலைவர்களை மோடி சந்தித்து பேச உள்ளார். சீன அதிபர் ஷீ ஜிங்பிங் உடனான சந்திப்பு குறித்து உறுதி செய்யப்படவில்லை.இந்தியா, சீனா இடையே எல்லைப் பிரச்னை தீவிரமாக உள்ளது. சமீபத்தில் சீனாவின் உளவுக் கப்பல், நம் அண்டை நாடான இலங்கைக்கு செல்வதற்கு மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்திருந்தது.


latest tamil news


இந்த சூழ்நிலையில், மோடி, ஜிங்பிங் சந்திப்பு நடக்குமா என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திஉள்ளது.இதற்கிடையே, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், சீன அதிபர் ஷீ ஜிங்பிங் ஆகியோர் நேற்று சந்தித்து பேசினர். அதைத் தொடர்ந்து பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் மற்றும் புடின் இடையேயான சந்திப்பும் நடந்தது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
16-செப்-202206:51:47 IST Report Abuse
அப்புசாமி தோ.. கீரிக்கும்.பாம்புக்கும் சண்டை உடப்போறேன்னு பில்டப் குடுத்துக்கிட்டே இருப்பாங்க.... இல்லே தனித்தனியா டீ குடிச்சுட்டு வர வேண்டியதுதான்.
Rate this:
Cancel
ashwin - Seattle,யூ.எஸ்.ஏ
16-செப்-202206:37:31 IST Report Abuse
ashwin Yes
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X