நாய் வளர்க்கும் விஷயத்தில் தகராறுமகளை கொன்று தாய் தற்கொலை

Added : செப் 16, 2022 | |
Advertisement
பெங்களூரு-நாய் வளர்க்கும் விஷயத்தில், கணவர் வீட்டினருடன் தகராறு ஏற்பட்டதால், விரக்தி அடைந்த பெண், மகளை கொன்று, தானும் தற்கொலை செய்து கொண்டார்.கர்நாடக தலைநகர் பெங்களூரின், கோவிந்தபுராவில் வசிப்பவர் சீனிவாஸ், 40; மனைவி திவ்யா, 34. இவர்களின் மகள் ரித்யா, 14. இவர்கள் வீட்டில் நாய் வளர்த்து வந்தனர். திவ்யாவுக்கு சுவாசப்பிரச்னை இருந்தது. சமீபத்தில் சிகிச்சைக்கு சென்ற

பெங்களூரு-நாய் வளர்க்கும் விஷயத்தில், கணவர் வீட்டினருடன் தகராறு ஏற்பட்டதால், விரக்தி அடைந்த பெண், மகளை கொன்று, தானும் தற்கொலை செய்து கொண்டார்.

கர்நாடக தலைநகர் பெங்களூரின், கோவிந்தபுராவில் வசிப்பவர் சீனிவாஸ், 40; மனைவி திவ்யா, 34. இவர்களின் மகள் ரித்யா, 14. இவர்கள் வீட்டில் நாய் வளர்த்து வந்தனர். திவ்யாவுக்கு சுவாசப்பிரச்னை இருந்தது. சமீபத்தில் சிகிச்சைக்கு சென்ற திவ்யாவிடம், 'சுவாசப் பிரச்னை உள்ளதால் நாய் வளர்க்க வேண்டாம்' என, டாக்டர் கூறினார்.

இதையடுத்து, திவ்யா தன் மாமனார், மாமியாரிடம் 'நாய் வளர்க்க வேண்டாம்; வேறு யாருக்காவது கொடுத்து விடலாம்' என கேட்டுக் கொண்டார். ஆனால், மாமனார், மாமியார் சம்மதிக்கவில்லை.இதனால் தகராறு ஏற்படவே, விரக்தி அடைந்த திவ்யா, 11ம் தேதி இரவு மகளை கொலை செய்துவிட்டு, தானும் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மறுநாள் நீண்ட நேரமாகியும் அறைக்கதவு திறக்கப்படவில்லை. கதவை உடைத்து பார்த்த போது, தாயும், மகளும் இறந்து கிடப்பது தெரிந்தது.திவ்யாவின் பெற்றோர், கோவிந்தபுரா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். போலீசார், கணவர் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் விசாரிக்கின்றனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X