மாணவிக்கு தொல்லைஆசிரியருக்கு போக்சோதிருந்தவே மாட்டாங்களா?| Dinamalar

மாணவிக்கு தொல்லைஆசிரியருக்கு 'போக்சோ'திருந்தவே மாட்டாங்களா?

Added : செப் 16, 2022 | |
ஸ்ரீவில்லிபுத்துார்:ஸ்ரீவில்லிபுத்துார் அருகே, எட்டாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியரை, 'போக்சோ' சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.விருதுநகர் மாவட்டம், நத்தம்பட்டியில் ஆர்.சி., உயர்நிலைப் பள்ளியில் சமூகவியல் ஆசிரியராக பணியாற்றியவர் ஸ்டீபன் அந்தோணிராஜ், 52. இவர் அப்பள்ளி எட்டாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.பெற்றோரிடம்

ஸ்ரீவில்லிபுத்துார்:ஸ்ரீவில்லிபுத்துார் அருகே, எட்டாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியரை, 'போக்சோ' சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.

விருதுநகர் மாவட்டம், நத்தம்பட்டியில் ஆர்.சி., உயர்நிலைப் பள்ளியில் சமூகவியல் ஆசிரியராக பணியாற்றியவர் ஸ்டீபன் அந்தோணிராஜ், 52. இவர் அப்பள்ளி எட்டாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.


பெற்றோரிடம் மாணவி இதை கூறினார். நேற்று காலை 9:00 மணிக்கு பள்ளி முன் பெற்றோர் திரண்டு, ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.தகவலறிந்து வந்த போலீசார், ஆசிரியர் ஸ்டீபன் அந்தோணி ராஜை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றனர். பின், போக்சோ சட்டத்தின் கீழ் அவரை கைது செய்தனர். அசம்பாவிதங்களை தவிர்க்க நத்தம் பட்டியில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.


தலைமை ஆசிரியர்


துாத்துக்குடி, முத்தையாபுரத்தில் செயல்படும் அரசு உதவி பெறும் துவக்கப் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஆனந்தராஜ், 56. இவர், ஐந்தாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். சிறுமியின் தாய் துாத்துக்குடி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். ஆனந்தராஜை போக்சோவில் கைது செய்த இன்ஸ்பெக்டர் வனிதா, அவரை சிறையில் அடைத்தார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X