இயற்கை விவசாயம் மேம்பட மக்கள் ஒத்துழைப்பு அவசியம் வனத்துறை அமைச்சர் கருத்து

Added : செப் 16, 2022 | |
Advertisement
கூடலுார்:'இயற்கை விவசாயம் மேம்பட மக்கள் ஒத்துழைக்க வேண்டும்,' என, வனத்துறை அமைச்சர் கூறினார்.கூடலுார் மார்த்தோமா நகரில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், மறைந்த முதல்வர் அண்ணாதுரை நினைவு சைக்கிள் போட்டி நேற்று நடந்தது. போட்டியை வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் துவக்கி வைத்தார். மாவட்ட கலெக்டர் முன்னிலை வகித்தார். முதல், 10 இடங்களை பிடித்த
இயற்கை விவசாயம் மேம்பட மக்கள் ஒத்துழைப்பு அவசியம் வனத்துறை அமைச்சர் கருத்து

கூடலுார்:'இயற்கை விவசாயம் மேம்பட மக்கள் ஒத்துழைக்க வேண்டும்,' என, வனத்துறை அமைச்சர் கூறினார்.கூடலுார் மார்த்தோமா நகரில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், மறைந்த முதல்வர் அண்ணாதுரை நினைவு சைக்கிள் போட்டி நேற்று நடந்தது. போட்டியை வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் துவக்கி வைத்தார். மாவட்ட கலெக்டர் முன்னிலை வகித்தார். முதல், 10 இடங்களை பிடித்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.தொடர்ந்து, மண்வயல் குங்கூர்மூலா அரசு மேல்நிலைப் பள்ளியில், தோட்டக்கலை துறை சார்பில், ஜீவாமிருதம் தயாரிக்கும் பணியின் துவக்க விழா, 'சீனிவாசன சேவை' அறக்கட்டளை சார்பில், பழங்குடி பெண்கள், குழந்தைகளுக்கு பாரம்பரிய சத்துணவு வழங்கும் விழா நடந்தது.
அமைச்சர் ராமச்சந்திரன் பேசுகையில், ''இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். அரசு சார்பில் ஒரு லட்சம் லிட்டர் ஜீவாமிருதம் தயாரித்து விவசாயிகளுக்கு வழங்கப்படும். பழங்குடியின சமுதாயம் மேம்பட பெற்றோர் குழந்தைகளை படிக்க வைக்க வேண்டும்,''என்றார்.விழாவில், ஆர்.டி.ஓ., சரவணகண்ணன், தோட்டக்கலை துறை இணை இயக்குனர் (பொ.,) சிபிலாமேரி, கூடலுார் ஊராட்சி ஒன்றிய தலைவர் கீர்த்தனா, ஸ்ரீமதுரை ஊராட்சி தலைவர் சுனில் உட்பட பலர் பங்கேற்றனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X