அண்ணாதுரை பிறந்த நாள் கொண்டாட்டம்

Added : செப் 16, 2022 | |
Advertisement
அன்னுார்:அன்னுார் ஒன்றியத்தில், தி.மு.க., சார்பில் அண்ணாதுரை பிறந்த நாள் நேற்று கொண்டாடப்பட்டது.மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணா துரையின் 114 வது பிறந்தநாள் விழா அன்னுார் தெற்கு ஒன்றியத்தில் தி.மு.க., சார்பில் நேற்று கொண்டாடப்பட்டது. தெற்கு ஒன்றிய செயலாளர் சத்தியமூர்த்தி தலைமையில் கணேசபுரத்தில், கட்சி கொடி ஏற்றி, பொது மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. ஒன்றிய அவை தலைவர்
அண்ணாதுரை பிறந்த நாள் கொண்டாட்டம்

அன்னுார்:அன்னுார் ஒன்றியத்தில், தி.மு.க., சார்பில் அண்ணாதுரை பிறந்த நாள் நேற்று கொண்டாடப்பட்டது.மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணா துரையின் 114 வது பிறந்தநாள் விழா அன்னுார் தெற்கு ஒன்றியத்தில் தி.மு.க., சார்பில் நேற்று கொண்டாடப்பட்டது. தெற்கு ஒன்றிய செயலாளர் சத்தியமூர்த்தி தலைமையில் கணேசபுரத்தில், கட்சி கொடி ஏற்றி, பொது மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. ஒன்றிய அவை தலைவர் சேதுபதி உள்பட பலர் பங்கேற்றனர்.அன்னுார் வடக்கு ஒன்றியத்தில், பொகலுாரில், ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி தலைமையிலும், அன்னுார் நகரில், பேரூராட்சி செயலாளர் பரமேஸ்வரன் தலைமையிலும், கட்சி கொடி ஏற்றி இனிப்பு வழங்கப்பட்டது. மாநில பொதுக்குழு உறுப்பினர் ரகமத்துல்லா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.அன்னுார் நகரில், அ.தி.மு.க., சார்பில், நகர செயலாளர் சவுக்கத் அலி தலைமையில், ஓதிமலை ரோடு கார்னரில், கட்சி கொடி ஏற்றப்பட்டு, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. வடக்கு ஒன்றிய செயலாளர் அம்பாள் பழனிசாமி, பாசறை மாவட்ட செயலாளர் வசந்த் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


மேட்டுப்பாளையம்


மேட்டுப்பாளையம் நகரில் அண்ணாதுரை பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. தி.மு.க.,வினர் மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன் தலைமையில் ஊர்வலமாக வந்து, பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள அண்ணாதுரை சிலைக்கு மாலை அணிவித்தனர். இவ்விழாவில் முன்னாள் எம்.எல்.ஏ., அருண்குமார், நகரச் செயலாளர்கள் முனுசாமி, முகமது யூனுஸ், காரமடை கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர் கல்யாணசுந்தரம் உள்ளிட்ட ஏராளமான கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.


சூலுார்


முன்னாள் முதல்வர் அண்ணாதுரையின், 114 வது பிறந்தநாள் விழா, சூலூர், கருமத்தம்பட்டி, சோமனூர் பகுதியில் நேற்று கொண்டாடப்பட்டது. சோமனூர் நகராட்சி அலுவலகம் முன்பு, தி.மு.க.,சார்பில் நடந்த நிகழ்ச்சியில் நகராட்சி தலைவர் மனோகரன் மற்றும் கவுன்சிலர்கள், அண்ணா படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.சூலூர் எம்.எல்.ஏ., அலுவலகத்தில், எம்.எல்.ஏ., கந்தசாமி தலைமையில் அண்ணா படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இதில், ஏராளமான அ.தி.மு.க., நிர்வாகிகள் பங்கேற்றனர். கருமத்தம்பட்டியில் நடந்த நிகழ்ச்சியில் அ.தி.மு.க., நகர செயலாளர் ஆதவன் பிரகாஷ் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்று அண்ணா படத்துக்கு மரியாதை செலுத்தினர். இருகூர், சூலூர் மாதப்பூர் பகுதியிலும் தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., வினர் மரியாதை செலுத்தினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X