பயன்பாடில்லாத எம்.எல்.ஏ., அலுவலகத்தில் அத்துமீறல்

Added : செப் 16, 2022 | |
Advertisement
மண் மயமாகும் ரோடுபொள்ளாச்சி - கோவை தேசிய நெடுஞ்சாலையில், சேரன் நகரை அடுத்துள்ள வளைவில் மழை பெய்யும் போது, நீரில் அடித்து வரப்பட்டு ரோட்டில் மண் பரவியுள்ளது. இதை முறையாக அப்புறப்படுத்தமாமல் இருப்பதால், விபத்து அபாயம் நிலவுகிறது.- அரவிந்த், பொள்ளாச்சி.பராமரிப்பில்லாத அலுவலகம்வால்பாறை எம்.எல்.ஏ., அலுவலகம் நீண்ட நாட்களாக பயன்பாடின்றி பூட்டிக்
பயன்பாடில்லாத எம்.எல்.ஏ., அலுவலகத்தில் அத்துமீறல்


மண் மயமாகும் ரோடு



பொள்ளாச்சி - கோவை தேசிய நெடுஞ்சாலையில், சேரன் நகரை அடுத்துள்ள வளைவில் மழை பெய்யும் போது, நீரில் அடித்து வரப்பட்டு ரோட்டில் மண் பரவியுள்ளது. இதை முறையாக அப்புறப்படுத்தமாமல் இருப்பதால், விபத்து அபாயம் நிலவுகிறது.- அரவிந்த், பொள்ளாச்சி.


பராமரிப்பில்லாத அலுவலகம்


வால்பாறை எம்.எல்.ஏ., அலுவலகம் நீண்ட நாட்களாக பயன்பாடின்றி பூட்டிக் கிடப்பதால், சிலர் சமூக விரோத செயல்களுக்கு பயன்படுத்த துவங்கியுள்ளனர். நகராட்சி நிர்வாகம் அலுவலக வளாகத்தை பராமரித்து, பாதுகாக்க வேண்டும்.- வேலுசாமி, வால்பாறை.


நெடுஞ்சாலையில் அபாயம்


பொள்ளாச்சி, மீன்கரை நெடுஞ்சாலையில், முக்கிய இடங்களில் போதிய அளவு ஒளிபிரதிபலிப்பான்கள் அமைக்கப்படாததால், இரவில் வாகன விபத்து ஏற்படும் சூழல் நிலவுகிறது. நெடுஞ்சாலை துறை மற்றும் வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள் கவனிக்க வேண்டும்.- சின்னசாமி, ஜமீன் ஊத்துக்குளி.


பஸ் ஸ்டாண்டில் அத்துமீறல்


வால்பாறை புதிய பஸ் ஸ்டாண்டில் தனியார் வாகனங்கள் அதிகளவில் நிறுத்தப்படுவதால், 'பார்க்கிங்' பகுதி போன்று காணப்படுகிறது. இதனால், நெரிசல் ஏற்படுவதால், தனியார் வாகனங்கள் பஸ் ஸ்டாண்டுக்குள் பிரவேசிக்க கூடாது என்ற விதிமுறையும் மீறப்படுகிறது.- நந்தினி, வால்பாறை.


சிதையும் இணைப்பு ரோடு


பொள்ளாச்சி, ஜமீன் முத்துார் - டி.நல்லிக்கவுண்டன்பாளையம் இணைப்பு ரோடு, பல இடங்களில் சிதைந்து, விபத்து ஏற்படும் அபாயம் நிலவுகிறது. ரோட்டை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.- தங்கராஜ், பொள்ளாச்சி.


வீணாகும் நிழற்கூரை


பொள்ளாச்சி, சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சி அலுவலக சுற்றுச்சுவரில், ரோடு விரிவாக்கத்தின் போது அகற்றப்பட்ட பயணியர் நிழற்கூரை, பல மாதங்களாக வெறுமனே வைக்கப்பட்டு பயன்பாடின்றி வீணாகிறது. இதை தேவையான பகுதியில் அமைக்க வேண்டும்.- சூடாமணி, பொள்ளாச்சி.


குடிநீர் குழாயின் அவலம்


பொள்ளாச்சி, ரயில்வே ஸ்டேஷனில் பல்வேறு வசதிக்குறைவுகள் நிலவும் நிலையில், முதல் பிளாட்பார்மில் உள்ள குடிநீர் குழாயில் தண்ணீர் கசிந்து வீணாவதுடன், தண்ணீரும் அடைத்துக் கொண்டு கழிவுநீர் தொட்டி போல காணப்படுவதால், பயணியர் பயன்படுத்த இயலாத நிலை ஏற்படுகிறது.- தங்கராஜ். பொள்ளாச்சி.


ரோடு புதுப்பிக்கணும்!


பொள்ளாச்சி, டி.கோட்டாம்பட்டியில் பாதாள சாக்கடை பணிகள் நிறைவடைந்த பல ரோடுகள் சீரமைக்கப்படாமல் உள்ளன. இந்த ரோடுகளை புதுப்பிக்க நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- தீபக், டி.கோட்டாம்பட்டி.


அறிவிப்பு வையுங்க!


பொள்ளாச்சியில் இருந்து கிணத்துக்கடவு செல்லும் போது, மேம்பாலம் துவங்கும் இடத்தில் பஸ் ஸ்டாண்ட் செல்வதற்கான வழித்தடம் என, அறிவிப்பு வைக்க வேண்டும்.- சுந்தர், கிணத்துக்கடவு.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X