வாகனத்தை தாக்கிய காட்டு யானை :சப்தம் எழுப்பி தப்பிய 9 பேர்

Added : செப் 16, 2022 | |
Advertisement
பொள்ளாச்சி:பொள்ளாச்சி டாப்சிலிப், பரம்பிக்குளத்தில் பழங்குடியின மக்கள் மற்றும் வனத்துறையினர் உள்ளனர். இங்குள்ள மக்கள் ஜீப் பயன்படுத்தி, சேத்துமடை, ஆனைமலை பகுதிகளுக்கு வந்து, தங்களுக்கு தேவையான பொருட்கள் வாங்கிச்செல்கின்றனர். பலர் வேலைக்கு செல்கின்றனர்.ஆண்டு முழுவதிலும், சேத்துமடை - டாப்சிலிப், பரம்பிக்குளம் ரோட்டோரம் யானை, காட்டுமாடு மற்றும் மான்கள் உள்ளிட்ட பல
வாகனத்தை தாக்கிய காட்டு யானை :சப்தம் எழுப்பி தப்பிய 9 பேர்

பொள்ளாச்சி:பொள்ளாச்சி டாப்சிலிப், பரம்பிக்குளத்தில் பழங்குடியின மக்கள் மற்றும் வனத்துறையினர் உள்ளனர். இங்குள்ள மக்கள் ஜீப் பயன்படுத்தி, சேத்துமடை, ஆனைமலை பகுதிகளுக்கு வந்து, தங்களுக்கு தேவையான பொருட்கள் வாங்கிச்செல்கின்றனர். பலர் வேலைக்கு செல்கின்றனர்.ஆண்டு முழுவதிலும், சேத்துமடை - டாப்சிலிப், பரம்பிக்குளம் ரோட்டோரம் யானை, காட்டுமாடு மற்றும் மான்கள் உள்ளிட்ட பல வனவிலங்குகள் சுற்றித்திரிகின்றன.இந்நிலையில், நேற்று, பரம்பிக்குளத்தை சேர்ந்த துளசி, 23, என்பவர், மூன்று வயது சிறுவன் உள்பட எட்டு பேரை ஜீப்பில் அழைத்துக்கொண்டு, பரம்பிக்குளத்தில் இருந்து சேத்துமடை சென்றார்.அப்போது, டாப்சிலிப் அருகே புதரினுள் இருந்த யானை திடீரென வாகனத்துக்கு முன் வந்து நின்றதுடன், திடீரென வாகனத்தை முட்டி தாக்கியது.வானகத்தினுள் இருந்த பழங்குடி மக்கள் சப்தமிட்டதை தொடர்ந்து, யானை வனத்தினுள் சென்றது. இச்சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக, ஒன்பது பேரும் தப்பினர்.சேத்துமடை - டாப்சிலிப் ரோட்டோரத்தில், பல அடி உயரத்துக்கு புதர் வளர்ந்துள்ளதால், வனவிலங்குகள் ரோட்டோரம் நிற்பது தெரியாமல் வாகன ஓட்டுனர்கள் சிரமப்படுகின்றனர். ரோட்டோரத்தில் உள்ள புதரை அகற்றி சுத்தம் செய்ய, வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X