போலீஸ் செய்திகள்

Added : செப் 16, 2022 | |
Advertisement
பாம்பு கடித்து ஒருவர் மயக்கம்பொள்ளாச்சி, ஆழியாறு பகுதியை சேர்ந்த ரவிச்சந்திரன், 24, ஆழியாறு பகுதியில் வேட்டைத்தடுப்பு காவலராக பணியாற்றுகிறார். நேற்று, பொள்ளாச்சி - வால்பாறை ரோட்டில், 14வது கொண்டை ஊசி வளைவில் ரோந்து பணியில் ஈடுபட்டார்.அப்போது, ரோட்டோம் நின்ற போது, அங்குள்ள மரத்தில் இருந்து அவர் மீது விழுந்த பாம்பு, அவரை தலையில் கடித்தது. சம்பவ இடத்திலேயே அவர்


பாம்பு கடித்து ஒருவர் மயக்கம்



பொள்ளாச்சி, ஆழியாறு பகுதியை சேர்ந்த ரவிச்சந்திரன், 24, ஆழியாறு பகுதியில் வேட்டைத்தடுப்பு காவலராக பணியாற்றுகிறார். நேற்று, பொள்ளாச்சி - வால்பாறை ரோட்டில், 14வது கொண்டை ஊசி வளைவில் ரோந்து பணியில் ஈடுபட்டார்.அப்போது, ரோட்டோம் நின்ற போது, அங்குள்ள மரத்தில் இருந்து அவர் மீது விழுந்த பாம்பு, அவரை தலையில் கடித்தது. சம்பவ இடத்திலேயே அவர் மயங்கி விழுந்தார். அருகிலிருந்த வனத்துறையினர் அவரை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்துள்ளனர். தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.


கள் விற்பனை; இருவர் கைது


கிணத்துக்கடவு, சொக்கனுார் பகுதிகளில் தடை செய்யப்ட்ட 'தென்னங்கள்' விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்துக்குச்சென்று போலீசார் சோதனை செய்ததில், இருவர் கள் விற்பனை செய்து வந்தனர்.போலீசார், அவர்களை பிடித்து விசாரித்ததில், அதேபகுதியை சேர்ந்த கந்தசாமி, 60, சின்ராசு என்கிற நடராஜ், 50, என்பது தெரியவந்தது. இருவரையும் கைது செய்த போலீசார், 11 லிட்டர் 'தென்னங்கள்' பறிமுதல் செய்து அழித்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X